Aran Sei

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம்: தங்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது

Image Credits: New Indian Express

வியாழக்கிழமை, விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் முற்போக்கு கட்டுப்பாடுகளுக்கு இணங்க, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்), வெளிநாட்டு ஊடகங்கள் (ஐ விசாக்கள்), மாணவர்கள் (எஃப் விசாக்கள்) மற்றும் பரிமாற்ற பார்வையாளர்களுக்கு (ஜே விசாக்கள்) ஆரம்ப அனுமதிக்கான காலத்தை மட்டுப்படுத்தும் ஒரு விதியை முன்மொழிந்தது.

தற்போது “சூழ்நிலை காலம்” கட்டமைப்பின் கீழ் செயல்படும் மூன்று விசா வகைகளுக்கான நிலையான கால அவகாசங்கள் மற்றும் நீட்டிப்பு காலங்களை இவ்விதி முன்மொழிகிறது.

தற்போது, ​​இந்த வகைகளில் விசா வைத்திருப்பவர்கள், அனுமதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் (உதாரணமாக, எஃப் வகை விசாக்கள் வைத்துள்ள மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை அங்கே இருக்கலாம்). இந்தக் கட்டுப்பாடு விதி இறுதி செய்யப்பட்டால், தற்போதைய நிலை மாறும்.

முன்மொழியப்பட்ட புதிய விதியின் கீழ் எஃப் மற்றும் ஜே மாணவர்கள் ஆரம்ப கட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் (ஒரு அமெரிக்க இளங்கலை பட்டத்தின் சராசரி காலம்).

இருப்பினும், 10% க்கும் அதிகமாக, தற்காலிக விசா செல்லுபடியாகும் போதே அமெரிக்காவை விட்டு வெளியேறாத நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தங்கும் காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும்.

பயங்கரவாத நாடுகளின் பட்டியலின் கீழ் அரசு உதவி பெறுபவர்களுக்கும், அந்நாட்டில் பிறந்தவர்களுக்கும், குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கும் இரண்டு ஆண்டு கால அவகாசம் தான் வழங்கப்படும்.

டி.எச்.எஸ் விதி நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எஃப் மற்றும் ஜே மாணவர்களுக்கு “சூழ்நிலை காலம்” வரை தங்கும் நிலை மாற்றப்பட்டு, பட்ட படிப்புக் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படுவார்கள் (4 ஆண்டுகளுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்).

“ஐ, எப், ஜெ விசா திட்டங்களின் வளர்ச்சியின்போது அமெரிக்க குடிவரவு அமைப்பின் ஒருமைபாட்டை காப்பதற்காக இந்தப் புது விதி முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விதிமுறை குடியேற்றமற்ற வகைப்பாடுகளுக்கு தகுதி பெறுவதற்கான அடிப்படை தேவைகளில் மாற்றங்களை முன்மொழியவில்லை,” என்று டி.எச்.எஸ் செய்தி அறிக்கை கூறியது.

வெளிநாட்டு ஊடக விசா வைத்திருப்பவர்கள் ஆரம்பத்தில் 240 நாட்களுக்கு மிகாத ஒரு காலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். “தொடர்புடைய நடவடிக்கைகளின் நீளத்தின் அடிப்படையில் அதிகபட்சம் 240 நாட்களுக்கு அவர்கள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்