Aran Sei

’விவசாயிகள் போராட்டத்தை கவனத்தில் கொள்ளுங்கள்’ – அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்

ந்தியாவில் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறித்து ஏழு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு தலைமைச்  செயலாளர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நேற்று முன்தினம் (டிசம்பர் 23), ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினரும் குடியரசுக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் எழுதிய கடிதத்தில்,  இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அமைதியின்மை குறித்து தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அணுக வேண்டும் என்றும் கோரியுள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

மேலும், “அரசியல் ஆர்ப்பாட்டங்கள் குறித்து நன்கு அறிந்த ஒரு நாடாக அமெரிக்கா இருப்பதால், தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு ஆலோசனை வழங்க எங்களால் முடியும் என்று நம்புகிறோம்.” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போதுள்ள சட்டத்திற்கு கட்டுப்பட்டு, நாட்டின் கொள்கையை தீர்மானிக்கும் இந்திய அரசின் உரிமையை ஒரு நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களாக நாங்கள் மதிக்கிறோம். தங்கள் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாக விவசாய சட்டங்கள் உள்ளது என்று இந்திய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு ஆதரவாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பலர் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். அவர்களின் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.” என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

” விவசாய போராட்ட பிரச்சினையை இந்தியத் தரப்பிடம் எழுப்புக ” – போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தும் பிரிட்டிஷ் எம்பிக்கள்

மேலும், “குறிப்பாக, பஞ்சாபில் இருந்து டெல்லிக்குள் அமைதியாக அணிவகுத்து வந்த விவசாயிகளை தண்ணீர் பீரங்கி தாக்குதல்கள் நடத்தியதையும், முள்வேலி தடுப்புகள் ஏற்படுத்தியதையும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல்கள் நடத்தியதையும் சர்வதேச பத்திரிகைகளில் பார்த்த பிறகே உங்களை அணுக நாங்கள் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம்.” என்று விளக்கியுள்ளனர்.

“இது பஞ்சாப் பகுதியுடன் தொடர்புடைய சீக்கிய அமெரிக்கர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயமாகும். இருந்தாலும், இது மற்ற இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இந்திய அமெரிக்கர்களையும் பெரிதும் பாதிக்கிறது. பஞ்சாபில் தங்கள் குடும்பங்களையும், சொந்தங்களையும், மூதாதையர் நிலங்களையும் கொண்டிருக்கும் பல இந்திய அமெரிக்கர்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்.” என்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு தலைமைச் செயலாளர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்