அமெரிக்க போர் குற்றங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு எதிராக பொய்யான தகவல்கள் வெளியிட்டதாக முக்கிய குற்றவாளி சிகுர்டூர் ‘சிக்கி’ தோடர்சன் ஒப்புக் கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் செய்தித்தாளான ஸ்டன்டின் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியிருக்கும் கட்டுரையில், அமெரிக்க அரசு இணையதளங்களை ஹேக்கிங் செய்யத் தோடர்சனை விக்கிலீக்ஸ் பிரதிநிதியாக ஜூலியன் அசாஞ்சே அணுகியதாக தோடர்சன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்காக ஹேக்கிங்கில் ஈடுபடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி
பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்த வழக்கில், அவர்மீதான குற்றச்சாட்டை உருவாக்க அமெரிக்க நீதித்துறைக்கு தோடர்சன் ஒத்துழைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க போர்குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான உளவுச்சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அசாஞ்சே, அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் பட்சத்தில் அங்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர் கொண்டுள்ளார்.
”அமெரிக்க வழக்கை ஏன் கைவிட வேண்டும் என்பதை நிருபிக்க இது சமீபத்திய வெளிப்பாடு தான்” என 2010 ஆம் ஆண்டு முதல் அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸிற்கு ஆலோசனை வழங்கி வரும் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கின் அடிப்படை உண்மை முற்றிலும் முறிந்துவிட்டதாக வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.