Aran Sei

ஈராக், ஆப்கானிஸ்தான் – அமெரிக்க படைகளை திரும்பப் பெறுகிறார் ட்ரம்ப்

ப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் , ட்ரம்ப் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ படைகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாக ( 2,500 ராணுவ வீரர்கள்) குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை (நவம்பர் 16) தெரிவித்ததாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முடிவில்லா போர் : 3.7 கோடி மக்கள் இடம்பெயர்வு

ஈராக்கில் உள்ள படைகளின் எண்ணிக்கையையும் 2,500 ஆகக் குறைக்க  அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் முடிவு செய்துள்ளது.  இது 500 க்கும் அதிகமான எண்ணிக்கையிலான படைக் குறைப்பு ஆகும்.

கடந்த வாரம் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைகள் இருப்பதைப் பற்றி தனது விரக்தியைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலான விசுவாசமிக்க நபர்களை பென்டகனில் நியமித்துள்ளார் என்று ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவிடம் உலக நாடுகள் சராமாரி கேள்வி

நடந்து முடிந்த தேர்தலில் ஜோ பிடனுக்கு எதிராக தனது தோல்வியை ட்ரம்ப் ஒப்புக்கொள்ள மறுத்தபோதும், அவர் பதவியில் இருந்த கடைசி வாரங்களில் அவர் செய்த ஒரு சாதனையாக இது இருக்கும்.

கடந்த வார கடைசியிலேயே, இந்த திட்டமிட்ட படை குறைப்பு குறித்து அமெரிக்க இராணுவத் தலைவர்களிடம் கூறப்பட்டதாகவும், அதை நிறைவேற்றுவதற்கான தனி ஆணை விரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறியதாக ’தி இந்து’ தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை தளபதிகளுக்கு இதுகுறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

‘இனி அமெரிக்காவைச் சார்ந்துதான் இந்திய ராணுவம்’ – இடதுசாரிகள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இப்போது 4,500 முதல் 5,000 ராணுவ படை வீரர்களும்,  ஈராக்கில் 3,000 க்கும் மேற்பட்ட ராணுவ படை வீரர்களும் உள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001-ல் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு நிகழ்த்திய தாக்குதலுக்கு பின் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போரை’ அறிவித்தார்.

ஜோ பைடன் ஒரு போர்க் குற்றவாளியா?

அதற்கு பின்னான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளால், 3.7 கோடி மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க பல்கலைக் கழகம், ப்ரவுன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செய்த ’போரின் விலை’ (Cost of War) என்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த 3.7 கோடி மக்களில் 80 லட்சம் பேர் அகதிகள். மீதமுள்ள 2.9 கோடி மக்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், லிபியா, ஈராக், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள்.

ஆபத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் – ஐபிஐ அறிக்கை

இந்த 3.7 கோடி மக்கள் தொகை என்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் விர்ஜினியா மாகாணங்களில் உள்ள மக்கள் தொகைக்கு சமமானது. மேலும் இது மொத்த கனடா நாட்டு மக்கள் தொகைக்கு சமமானது என்று ‘தி கார்டியன்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்