Aran Sei

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றி அறிவிப்பா? – ட்ரம்ப் விளக்கம்

 ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்கூட்டியே தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் ஒரு சட்டரீதியான போருக்குத் தான் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு ஓட்டுப் போட்டேன்? – போட்டுடைத்த ட்ரம்ப்

நேற்று (நவம்பர் 1) வட கரோலினாவில் உள்ள சார்லோட் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசினார். அப்போது, தேர்தல் நாளன்று இரவு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகச் செய்தி வெளியானதைப் பற்றிக் கேட்கையில், “இல்லை. அது தவறான செய்தி.” என்று மறுத்துள்ளார் என்று ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், தேர்தல் நாளின் இரவு முதலே, தனது அணி ஒரு சட்டரீதியான போருக்குத் தயாராகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்டிக்கப்பட வேண்டியவரா ட்ரம்ப்?

“தேர்தலுக்குப் பிறகு வாக்குச் சீட்டுகளைச் சேகரிக்கும் முறையும் தேர்தல் முடிந்த பின்பும் நீண்ட நாட்களுக்கு மக்களை வாக்களிக்க அனுமதிப்பதும் ஒரு மோசமான அணுகுமுறைதான் என்று  நினைக்கிறேன்.” என்று ட்ரம்ப் கூறியுள்ளார் என்று ‘தி இந்து’  தெரிவித்துள்ளது.

“நாங்கள் தேர்தல் முடிந்த அன்று, இரவே எங்கள் வழக்கறிஞர்களுடன் செல்கிறோம்.” என்று கூறியுள்ளார். பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் பல மாகாணங்களில், தேர்தல் முடிந்த அடுத்தநாள்தான் வாக்குப்பெட்டிகளைப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இந்த அணுகுமுறையில் பெரிய ஆபத்து இருக்கிறது.” என்றும்,”நிறைய மோசடிகளும் தவறுகளும் நடக்கக்கூடும்” என்றும் நினைப்பதாகக் கூறியுள்ளார். “இந்தக் கணினிகளின் நவீனக் காலத்தில் தேர்தல் நடந்த நாளின் இரவே அதன் முடிவுகளை நம்மால் அறிய முடியவில்லை என்பது மோசமான விஷயம்.”என்று ட்ரெம்ப் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

‘ ட்ரம்ப் தவறான முன்னுதாரணம் ‘ – ஜனநாயகக் கட்சி விமர்சனம்

“நாங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று வருகிறோம். புளோரிடாவில் மிகச் சிறப்பாக வாக்குகள் வருகின்றன. ஒஹியோவிலும், நீங்கள் கேள்விப்பட்டபடியே, சிறப்பாக பதிவாகிக்கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, அங்கு நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மேலும் வட கரோலினாவிலும். எல்லா இடங்களிலும் சிறப்பாக வாக்குகள் பதிவாகி வருகின்றன.” என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’  குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்