Aran Sei

மறு வாக்கு எண்ணிக்கையால் எந்த மாறுதலும் ஏற்படாது – அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் கணிப்பு

வம்பர் 7 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாகாணங்களில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டிசன் ரிசர்ச் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் முக்கியத் தொலைக்காட்சிகள், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில் முடிவைக் கணித்துள்ளன.

அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் அடைந்த தோல்வியை ஒப்புக் கொள்ளாத டொனால்டு  ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டிற்கு மக்களின் ஆதரவைப் பெற பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று அவரின் பிரச்சாரச் செய்தித் தொடர்பாளர் டிம் முர்டாக் தெரிவித்துள்ளாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“அமைதியாகுங்கள் ட்ரம்ப்; அமைதியாகுங்கள்” – கிரெட்டா துன்பெர்க் பதிலடி

கடந்த வியாழக்கிழமைக்குக் பிறகு, ட்ரம்ப்  எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்திருக்கிறது என்று பல வழக்குகளை ட்ரம்ப் தொடுத்துள்ளார். ஆனால் அவற்றுக்கு அவர் எந்த ஆதாரமும் அளிக்கவில்லை. அவர் குறிப்பிடும் எந்த வகையான முறைகேடுகள் குறித்தும் தங்களுக்குத் தெரியாது என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

நேற்று (நவம்பர் 9), “பைடனின் தேர்வு நேர்மையற்ற ஊடகங்களால் நடந்துள்ளது. மிச், ஜிஏ, விஸ்க், நெவாடா போன்ற பலவற்றில் சட்டவிரோத வாக்குகளையே பைடன் பெற்றிருக்கிறார். இதையெல்லாம் நாங்கள் நிரூபிப்போம்.” என்று ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரும் நியூயார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கியுலியானி, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 28 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்று தோல்வியடைந்த முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இந்த மறு வாக்கு எண்ணிக்கையால் தேர்தல் முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர் என்று ‘தி வயர்’ இணையதளம் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசின் கருப்பின வேர்கள்

ட்ரம்ப்பின் இந்த வழக்குகளும், தேர்தல் முடிவிற்கு எதிரான பிரச்சாரங்களும் பெரிய அளவில் எடுபடாது என்றும் அவை தேர்தல் முடிவுகளைப் பாதிக்காது என்றும் சட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலர் அவரின் தோல்வியை ஏற்க மறுத்துள்ளனர். ஹாரிஸ்பர்க் மாகாணத் தலைநகர் பென்சில்வேனியாவைச் சேர்ந்த 53 வயதான லின் நெஸ்டர், இந்த ஆண்டுப் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் வாக்குகள் எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாக தி ஒயரிடம் கூறியுள்ளார். மேலும், “மின்னஞ்சல் வாக்குமுறை உண்மையில் சட்டபூர்வமானது என்று நான் நம்பவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்