Aran Sei

காஷ்மீர் இல்லாத இந்தியா – டிரம்ப் ஜூனியரின் டிவிட்டர் பதிவால் சர்ச்சை

மெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜுனியர், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு குறித்து தனது கருத்தை வெளியிடும் வகையில், ஒரு உலக வரைபடத்தை ட்ரம்ப் ஜூனியர் வெளியிட்டுள்ளார். அதில் உள்ள இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெறவில்லை. மாறாக காஷ்மீர் தனி பிராந்தியமாக காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் அந்த வரைபடத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களும் இந்தியாவுடன் இல்லாமல் தனித்த பிராந்தியங்களாக காட்டப்பட்டுள்ளன.

தனது தந்தை டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதி என்பதை குறிக்கும் வகையில், டிரம்ப் ஜுனியர் பகிர்ந்துள்ள வரைபடத்தில், ஏறக்குறைய அனைத்து நாடுகளும் குடியரசு கட்சியின் நிறமான சிகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, மெக்சிகோ உட்பட சில நாடுகள் மட்டும், ஜனநாயக கட்சியின் நிறமான, நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் புதிய வரைபடம்: அஜித் தோவல் வெளிநடப்பு

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் “டிரம்புடன் நமோவின் (மோடியின்) நெருங்கிய உறவிற்கு கிடைத்த விலை இது” என்று குறிப்பிட்டுள்ளார். சீனா மற்றும் மெக்சிகோ போன்ற பிரச்சனைக்குரிய நாடுகளுடன் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளதையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுள்ளதை குறிக்கும் வகையில், அந்நாட்டின் கருவூலத்துறை சார்பாக 20 ரியால் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் அச்சிடப்பட்டிருந்த உலக வரைபடத்தில், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருந்தது.

Credit: Twitter

இதுகுறித்து சவுதியிடம் இந்தியா கவலையை தெரிவித்ததுடன், உடனடியாக அதை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

மோடி அமெரிக்க வகை ஜனாதிபதியாக இருந்தால் என்ன நடக்கும்? – பானு தமீஜா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்