Aran Sei

அமேரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் ட்ரம்ப் : பைடன் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

credits : cnbc

அமேரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனிடம்  ”அதிபர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள், உளவுத்துறையின் அறிக்கைகள், பாதுகாப்பு  சம்பந்தப்பட்ட விஷயங்களை ட்ரம்ப் நிர்வாகம் தர மறுப்பதாக பைடனின் மாற்றம் செய்யும் குழு” (transition team) குற்றஞ்சாட்டியுள்ளது.

”அதிபர் மாற்றம்” (presidential transition) என்பது தற்போதைய அதிபரிடமிருந்து அதிபராக பதவியேற்க உள்ளவரிடம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைப்பதாகும்.

இந்த அதிபர் மாற்றத்தை விரைந்து நடத்துமாறு தேசிய பாதுகாப்பு குழுவில் பணிகளை  இருந்த முன்னாள் அதிகாரிகள் 150 பேர் அமேரிக்க அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் ஏற்படும் தாமதம் நாட்டின் பாதுகாப்புக்கே பேராபத்தாகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிஎன்பிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அமேரிக்க ஊடகங்களின் கூற்றுப்படி கடந்த நவம்பர் 3 ஆம் தேதியே அமேரிக்க அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றுவிட்டார்.

ஆனால் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் ட்ரம்ப் பல மாநிலங்களில் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என்றும் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

ட்ரம்ப்பிற்கு ஏற்றவாறு அவரது அரசாங்கமும் செயல்படுகிறது, அரசு செயலாளரான மைக் பாம்பியோ  ”அதிபர் மாற்றம் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்கும்போது சுமூகமாக நடைபெறும்”  என கூறியுள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பைடனின் மாற்றம் செய்யும் குழுவின் வழிகாட்டி ஜென் சாகி, ”அமேரிக்க அதிபராக பொறுப்பேற்க இருப்பவருக்கும், அவருடைய தேசிய பாதுகாப்பு குழுவிற்கும் உளவுத்துறையின் அறிக்கைகள், அதிபருக்கு தற்போதைய சூழலில் இருக்கும் நிகழ் நேர அச்சுறுத்தல்கள், வான்வெளி அச்சுறுத்தல்கள் ஆகியவை ட்ரம்பின் நிர்வாகத்திடமிருந்து தரப்படவில்லை” என கூறியுள்ளார்,

செப்டம்பர் 2002 நடந்த இரட்டை கோபுர தாக்குதலை (9/11) உளவுத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே கணிக்க முடியாததற்கான காரணமாக கூறப்படுவது, 2000 ஆம் ஆண்டு நடந்த அதிபர் மாற்றத்தில் இருந்த இழுபறியே” என இந்த சம்பவத்தை விசாரித்த சிறப்புக் குழுவான 9/11 கமிஷன் அறிக்கை கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இழுபறி – 2000 ஆண்டு தேர்தல் போன்றதா?

9/11 கமிஷன் அறிக்கையைச் சுட்டிகாட்டி செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சாகி, ”இதை செனட்டில் இருக்கும் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் படித்திருப்பார்கள் என நம்புகிறேன் இது போன்று இன்னும் பல தகவல்கள் வெளி வர உள்ளது” என்று கூறியுள்ளார்.

பைடனின் மாற்றம் செய்யும் குழு பொது சேவைகள் நிர்வாகம் அல்லது வேறு எந்த துறையுடனும் பிரச்சனையில் ஈடுபடவில்லை எனவும் “ உளவுத்துறை தகவல்களை தெரிந்துக் கொள்ளவும், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்யவும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான பணிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதன் மூலம் ஆட்சி பொறுப்பேற்பவர்கள் அமெரிக்க மக்களை ஒன்றிணைக்கவும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும் முடியும் ” என சாகி தெரித்துள்ளார்.

”தேசிய பாதுகாப்பு குழுவும், அதிபர் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் பைடன் மற்றும் கமலா ஹாரிசும் தங்களுடைய பாதுகாப்புக்கு எதிராக இருக்கும் அச்சுறுத்தல்கள் பற்றிய தகவலே தெரியாமல் உள்ளனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை அரசியலாக்க கூடாது” என சாகி தெரிவித்துள்ளார்.

மேலும் சாகி, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றியபோது இருந்த தொடர்புகளின் மூலம் அச்சுறுத்தல்கள் பற்றியும் தேசிய பாதுகாப்பு குறித்தும் விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் “ஜனவரி மாதத்தில் மற்றொரு நிர்வாகம் பதவியேற்குமா என்பதை ‘காலம் தான் சொல்லும்’ ” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்