Aran Sei

நேர்காணலைப் பாதியில் நிறுத்திய ட்ரம்ப் – பேட்டியை முன் கூட்டியே வெளியிட திட்டம்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்து நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் தற்போது மீண்டும் களத்துக்கு வந்துள்ளார்.

நவம்பர் 3 ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் ட்ரம்ப் கலிபோர்னியா, நெவடா, பெனிசில்வேனியா, ஃப்ளோரிடா, அரிசோனா என நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் செவ்வாயன்று ஒரு அமெரிக்கச் செய்தி நிறுவனத்துக்குக் கொடுத்துக் கொண்டிருந்த நேர்காணலைத் திடீரென்று முடித்துக்கொண்டார். தான் கொடுத்த நேர்காணலை அந்தச் செய்தி நிறுவனம் ஒளிபரப்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தானே வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், செய்தி வெளியிடுவதில் உள்ள துல்லியத்தைச் சோதிக்கவே இவ்வாறு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

லெஸ்லி ஸ்டால் தொதுத்து வழங்கும் “60 மினிட்ஸ்“ என்னும் நிகழ்ச்சியை, சிபிஎஸ் நியூஸ், ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “செய்திகளை வெளியிடுவதில் உள்ள துல்லியத்தின் பொருட்டு 60 மினிட்ஸ் எனும் நிகழ்ச்சியில் லெஸ்லி ஸ்டாலுடன் நான் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியை அந்த சேனல் ஒளிபரப்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நான் வெளியிட திட்டமிட்டு வருகிறேன்“ என்றும் “இதன் மூலம் மக்கள் போலியான அல்லது ஒரு தலைப்பட்சமான நேர்காணல் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் சமயத்தின் போது நடத்துப்பட்டுள்ள இது போன்ற நேர்காணலை எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிற எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் நேர்காணலுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லியுள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் திட்டமிட்டு நேர்காணலை நிறுத்தியதாகவும், துணை ஜனாதிபதி பென்ஸ் உடன் கூட்டாக நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்ததாகவும் சிஎன்என், தி ஹில் போன்ற பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்