கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை ட்விட்டரில் அதிபர் ட்ரம்ப், “கொரோனா பரிசோதனையில் எனக்கும் மெலினா ட்ரம்ப்-க்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக நாங்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். இருவரும் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம்.” எனப் பதிவிட்டிருந்தார்.
அதிபர் ட்ரம்ப்-ன் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்-கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நோய்த்தொற்று அறிவிக்கப்பட்ட பிறகு இன்று ட்ரம்ப் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தும், சிகிச்சைக்காக அலாபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் ராணுவ மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அதிபர் ட்ரம்ப் மருத்துவமனைக்கு பயணப்பட்டார்.
டொனால்டு ட்ரம்ப்-ன் மருத்துவர் சியான் கான்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அதிபர் ட்ரம்ப் மருந்துகள் உட்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாது நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
BREAKING: President Trump is receiving “Remdesivir therapy” for coronavirus, White House physician says. “He has completed his first dose and is resting comfortably.” https://t.co/33uDArrh2r pic.twitter.com/amWa2WMfOy
— CNBC Now (@CNBCnow) October 3, 2020
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப், மாகாணங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வந்தார்.
அமெரிக்கர்கள் மத்தியில் செப்டம்பர் 21-ம் தேதி பேசியபோது அதிபர் ட்ரம்ப், ”கொரோனா யாரையுமே பாதிக்காது. வயதானவர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மட்டுமே நோய்த்தொற்றுக்கு ஆளாவர்கள்.” எனக் கூறியிருந்தார்.
மேலும் அவர், கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மற்றும் பைடன் இடையே நடந்த விவாதத்தில், ஜோ பைடன் 200 அடி தூரத்தில் நின்று பேசும்போதும் கூட பெரிதான முகக்கவசம் அணிந்திருப்பார் என அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
கடந்த ஜூலை 28-ம் தேதி அதிபர் ட்ரம்ப் பகிர்ந்திருந்த காணொலி பதிவு, கொரோனா சிகிச்சை குறித்து தவறான தகவல் பரப்பும் வகையில் இருப்பதாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டது.
1.4 கோடி மக்கள் பார்த்திருந்த அந்தக் காணொலி, கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவதும் பொது முடக்கம் கடைபிடிப்பதும் அவசியமில்லை என ஒரு மருத்துவர் குழு சொல்வதாக இருந்தது என தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.