Aran Sei

” இப்போதுதான் நமது இயக்கம் ஆரம்பமாகிறது ” – புதிய அதிபர் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

Image Credit : theguardian.com

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தின் இறுதி நாளில் வெளியிட்ட வீடியோவில் “நாம் தொடங்கிய இயக்கம் இப்போதுதான் ஆரம்பமாகிறது” என்று தனது ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளார். தனது “முதலில் அமெரிக்கா” என்ற இயக்கம் வெற்றி பெற்றதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை – அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது

அதிபர் டிரம்ப் அமெரிக்க நேரப்படி இன்று காலை 8 மணிக்கு (இந்திய நேரம் மாலை 6.30) அதிபரின் வசிப்பிடமும் அலுவலகமுமான வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறவுள்ளார் என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இன்று பதவி ஏற்கவிருக்கும் புதிய அதிபரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் பெயர் குறிப்பிடாமலேயே அவர் புதிய அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளார்.

“அவர்களுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு அதிர்ஷ்டமும் இருக்கட்டும் என்று விரும்புகிறோம் – இது மிக முக்கியமான வார்த்தை” என்று டிரம்ப் தான் வெளியிட்டுள்ள 20 நிமிட வீடியோவில் அவர் கூறியுள்ளார்,

அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவை மாற்றும் முயற்சிகளில் பின்னடைவு, டிரம்ப் தலைமறைவு

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், ஜோ பைடனை விட குறைவான மாநில தேர்வாளர்கள் வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்திருந்தார். அதை எதிர்த்த குடியரசுக் கட்சியினரின் சட்டப் போராட்டங்களின் தோல்வியைத் தழுவின.

ஜனவரி 6-ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்ய நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தின் போது, நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தியது உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

டிரம்ப் தனது வீடியோ உரையில், நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது நடந்த வன்முறை தாக்குதலை குறிப்பிட்டு அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Image Credit : theguardian.com
பின்னணி விபரங்களை சரிபார்த்த பின்னர், 12 தேசிய காவல் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை – Image Credit : theguardian.com

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகியது, வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்த்தை மாற்றி அமைத்தது, சீனாவுடனான வர்த்தகப் போரை தொடங்கியது என்று தனது சாதனைகளை டிரம்ப் பட்டியலிட்டுள்ளார். எந்த ஒரு புதிய போரையும் தொடங்காத முதல் அதிபர் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

” கியூபா பயங்கரவாதத்தைத் தூண்டும் நாடு ” – டிரம்ப் அரசு

புதிய அதிபரின் பதவி ஏற்பு விழாவில், வெளியேறும் அதிபர் கலந்து கொள்வது என்ற மரபை புறக்கணிக்கும் முதல் அதிபர் என்ற பெருமையையும் டிரம்ப் பெறுகிறார். ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாகவே, காலை 8 மணிக்கு அவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார்.

ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவின் போது வன்முறை தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி விபரங்களை சரிபார்த்த பின்னர், 12 தேசிய காவல் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

ஜோ பைடன் பதவியேற்பு – அமெரிக்க தலைநகரில் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதிய அதிபரான ஜோ பைடனின் குடும்பம் வெள்ளை மாளிகைக்கு வரும் போது அவரை வரவேற்பதற்கு முந்தைய அதிபர் டிரம்பும் நாட்டின் முதல் பெண்ணான அவரது துணைவியார் மெலனி டிரம்பும் இருக்கப் போவதில்லை. இந்த வகையிலும், ஜோ பைடனிடம் தான் தேர்தலில் தோற்றதை அங்கீகரிக்க மறுத்து, அதிபர் டிரம்ப் மரபை மீறுகிறார்.

வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?

நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையை தூண்டி விட்டதற்காக, சென்ற வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்