Aran Sei

‘ட்ரம்ப், ஆபத்தான செய்தியை உலகிற்குச் சொல்கிறார்’ – ஜோ பைடன் கண்டனம்

திபர் டொனால்ட் ட்ரம்ப்,  தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதன் மூலமும், எங்கள் குழுவுடன் ஒத்துழைக்க மறுப்பது மூலமும்,  உலகிற்கு மிகவும் ஆபத்தான செய்தியைக் கொடுக்கிறார் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறியுள்ளாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் கட்டுப்பாடு குறித்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஜோ பைடனும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸும் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்கள்.

“அமைதியாகுங்கள் ட்ரம்ப்; அமைதியாகுங்கள்” – கிரெட்டா துன்பெர்க் பதிலடி

அப்போது, “அவர்கள் (அமெரிக்கர்கள்) நம்பமுடியாத பொறுப்பற்ற தன்மையைப் பார்த்துக்கோண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், அது எந்த அளவிற்குச் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும்  உலகின் பிற பகுதிகளுக்கு இதன் மூலம் தெரியவரும்.” என்று ஜோ பைடன்கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

தண்டிக்கப்பட வேண்டியவரா ட்ரம்ப்?

 

ஜோ பைடனும் அவரது குழுவும், தற்போதைய நிர்வாகத்தின் தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி திட்டங்களைக் கையில் எடுக்க முயல்கிறார்கள் என்றும் அவர்கள் தொற்றுநோய்க்குத் தேசிய அளவில் ஒருங்கிணைந்த புதிய நிர்வாகத்தை ஜனவரி 20 தொடங்க தயாராக உள்ளனர் என்று ‘தி இந்து’  குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஜனவரி 20 என்பது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பதிவியேற்கும் நாள்.

”குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்களுடனும், அதிபர் மாளிகை மற்றும் செனட்டில் உள்ளவர்களுடனும் சட்ட ரீதியிலான  நடவடிக்கைகளை  எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசின் கருப்பின வேர்கள்

அதே நேரம், ட்ரம்ப் நிர்வாகத்தை நீதிமன்றத்திற்கு அழைப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று (நவம்பர் 19), ட்ரம்ப்  மிச்சிகனில் இருந்து முக்கிய சட்ட வல்லுனர்களை  வெள்ளை மாளிகைக்கு  அழைத்து வந்து, மிச்சிகனில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளை திருத்துவதற்கான ஆலோசனைகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

எக்காரணம் கொண்டும் முடிவுகள் திருத்தப்படாது என்றும், ”நாங்கள் மிச்சிகனில் வென்றுள்ளோம். அதற்கான சான்றிதழ் பெறப் போகிறோம். இந்த மனிதன் (ட்ரம்ப்)  என்ன  நினைக்கிறார் என்று தெரியவில்லை.” என்று ஜோ பைடன் கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்