வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?

அமெரிக்கா இன்னும் அடிப்படையில் பிளவுபட்ட சமூகத்தின் பிரதிபலிப்பாக, வெடித்தெழ காத்திருக்கும் எரிமலையாக இருக்கிறது. பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது முறைகேடானது என வாதிடும் எதிர்கிளர்ச்சி தீவிர வலதுசாரிகள் எதிர்கட்சிகளால் திரட்டப்பட்டுக் கொண்டே உள்ளனர்.