Aran Sei

தாய்லாந்தில் மாணவர் போராட்டங்கள் – நடப்பது என்ன?

தாய்லாந்து நாடாளுமன்ற கூட்டு அமர்வில் பிரதமர் பிரயுத் சான் ஓ சா பேசுகிறார். image credit : www.aljazeera.com

தாய்லாந்து பிரதமரை பதவி விலகும்படி வலியுறுத்தி ஜனநாயக சார்பு இயக்கங்களின் போராட்டங்களில் மாணவர்கள் பெரிதும் கலந்து கொள்கின்றனர் இதனால் ஏறக்குறைய தினமும் வீதிகளில் போராட்டம் நடக்கிறது , இது போன்ற ஒரு பதட்டமான சூழலில் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது

அரசுக்கு எதிரான இந்த மக்கள் திரள் போராட்டங்கள் மூன்று மாதங்களாக நடந்து வருவதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.  கொரோனா முழு அடைப்பு காரணமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் சார்ந்திருக்கும் தாய்லாந்து, அதிகமாக பாதிக்கப்பட்டதால் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன என்று தி வயர் கருத்து கூறியுள்ளது.

பாங்காக் மற்றும் பிற நகரங்களில் மாணவர் தலைமையிலான குழுக்களின் ஆர்ப்பாட்டங்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வருகின்றன.

  • பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலக வேண்டும்.
  • அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து அதை மேலும் ஜனநாயகமாக மாற்ற வேண்டும்.
  • மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.

‘இதுவரை முடியாட்சிக்கு எதிராக இதற்கு முன்பு எந்த மக்கள் போராட்டமும் நடந்தது இல்லை என்றும், அரசு நிறுவனம் மிகவும் புனிதமானது’ என்றும் போராட்டங்களை அரசின் ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

“இந்தப் போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி அனைத்து தரப்பினரின் (அதாவது வீதிகளில் வந்து போராட்டம் செய்பவர்கள் வீதிக்கு வராமல் வீடுகளில் இருக்கும் கோடிக்கணக்கானவர்கள் ) குறைகளையும் ஆய்வு செய்து நாடாளுமன்ற செயல்முறை மூலம் இந்த வேறுபாடுகளை விவாதித்து தீர்ப்பதுதான்” என்று தாய்லாந்து பிரதமர் கடந்த வாரம் கூறியிருந்தார்.

திங்கள் கிழமை நாடாளுமன்ற அமர்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “மன்னராட்சியை பயன்படுத்தி அதிகாரத்தில் தனது பிடியை நியாயப்படுத்துவதை விட்டு விட்டு பிரதமர் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார் என்று அல் ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பு இல்லா கூட்டம் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டக்காரர்களுக்கு நாடாளுமன்ற பாதையில் அதிக நம்பிக்கை இல்லை, அரசாங்கத்தின் முயற்சிகள் நேர்மையற்றவை என்று அறிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற அவைத் தலைவர் மன்னராட்சியின் பங்கைப் பற்றி விவாதிக்க அனுமதியில்லை என்று உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

நாடாளுமன்ற அவையின் சபாநாயகர் சுவான் லீக் பை கூட்டத்தை தொடங்கினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து இருக்கும் 731 உறுப்பினர்களில் 450 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரயுத்தின் அரசாங்கம் விவாதத்திற்காக சமர்ப்பித்த கலந்துரையாடலின் குறிப்புகள் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசாமல் ஆர்ப்பாட்டங்களை பற்றிய விமர்சனமாகவே இருந்தன என்று கூறுகின்றனர்.

“அவர்களுடைய கவலைகள் பேரணிகள் நடத்தினால் மக்கள் கொரானா நோயினால் பாதிக்கப்படுவர்கள் என்பது இல்லை. மாறாக ஒரு சிறிய குழு அரசு வாகனங்களில் பவனி வரும் போது இடையுறு செய்ததாகவும் சட்ட விரோத கூட்டங்கள் கூட்டப்பட்டதாகவும் அரச குடும்பங்களின் படங்கள் அழிக்கப்படுவது குறித்தும் கவலை கொள்கினறனர்.”

ராணி சுதிதா சென்ற வாகன அணிவகுப்பை நோக்கி கண்டன குரல் எழுப்பிய போராட்டக்காரர்களை அங்கிருந்து போலீஸ் தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது.

2014-ல் ராணுவத் தலைவராக இருந்த பிரயுத் ஆட்சி கவிழ்ப்பு செய்து, கடந்த ஆண்டு தேர்தலில் நியாயமற்ற முறையில் ஆட்சியில் அமர்ந்ததாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் . ஏனெனில் இராணுவ சார்பு கட்சிக்கு ஆதரவாக சட்டங்கள் மாற்றப்பட்டுள்ள . இராணுவ ஆட்சியின் கீழ் எழுதப்பட்ட மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்பு ஜனநாயக விரோதமானது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட ஆறு அரசியலமைப்பு திருத்தங்களுக்கு வாக்களிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் அதில் வாக்கெடுப்பு நடத்தாமல் அத்தகைய திட்டங்களை மேலும் பரிசீலிக்க ஒரு குழுவை அமைத்தது இருக்கிறது அரசு என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வாக்களிக்க வேண்டும் ஆனால் இந்த திருத்த முன்மொழிவுகளுக்கு செனட் எனப்படும் மேலவையில் ஆதரவு இல்லை. காரணம் அதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்லை அதனால் அவர்கள் இயல்பாகவே மிகவும் பழமைவாதிகளாகவும், எதிர்ப்பாளர்களுக்கு விரோதமானவர்களாகவுமே செயல்படுவர்.

பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா : Image credit - www.aljazeera.com
பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா : Image credit – www.aljazeera.com

இன்று சட்டமியற்றுபவர்களையும் போராட்டத்தின் எதிர்ப்பாளர்களையும் எதிர்கொள்ளாமல் போராட்டக்காரர்கள் ஜெர்மன் தூதரகத்திற்கு எதிரில் அணிவகுப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இது ஜெர்மனியில் நேரத்தை செலவழித்து கொண்டிருக்கும் மன்னர் மகா வஜிரலோங்க் கோர்ன் மீது கவனத்தை கொண்டு வருவதற்காக நடத்தப்படுகிறது  என்று அவர்கள் கூறினர்.

அரச நிறுவனத்தை எதிர்த்தால் தாய்லாந்தின் பழமைவாதிகள் தூண்டப்பட்டிருக்கின்றனர். பல உள்ளூர் அரசு ஊழியர்கள் தலைமையில் முடியாட்சியின் சுய-பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் கடந்த வாரம் ஆன்லைனிலும் பல நகரங்களில் பேரணிகளிலும் போராட்டக்காரர்களுக்கு எதிராக அணிதிரண்டனர்.

ஒரு சிறிய குழுவில் அரசின் ஆதராளர்கள் நாடாளுமன்றத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதில் முடியாட்சியின் நிலைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய முயற்சி செய்யப்பட்டால், அதற்கு தாங்க் எதிர்ப்பு தெரிவிப்பதை சட்டமியற்றுபவர்களுக்கு தெரியப்படுத்தவே அங்கு கூடியிருந்ததாக கூறினர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்