Aran Sei

தைவான் ராணுவத்தில் ஒரே பாலின ஈர்ப்பாளர்களுக்குத் திருமணம்

credits : bbc

தைவான் ராணுவத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் (இரண்டு பெண்கள்) திருமணம் நடைபெற்றது. இது ராணுவ வட்டாரத்தில் நடந்த முதல் திருமணமாகும்.

ஆசியாவிலேயே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் எனச் சட்டம் இயற்றியது தைவான் நாடுதான். அந்தச் சட்டம் அமலுக்கு (மே 2019) வந்ததில் இருந்து இதுவரை 4000 த்திற்கும் அதிகமான ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தி இந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

தைவான் ராணுவம், ராணுவத்தில் இருக்கும் இரண்டு லெஸ்பியன் ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயலைச் செய்தது. தைவான் ராணுவம் சார்பாக நடத்தப்பட்ட இந்தப் பிரமாண்ட திருமணத்தில் 188 ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது. அதில் இரண்டு ஜோடிகள் ஒரே பாலின ஈர்ப்பாளர்கள். இதை அந்த ஜோடிகள் எல்ஜிபிடி (LGBT) சமூகத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதியுள்ளனர். இதன் மூலம் தங்களுடைய பாலுணர்வை மறைத்துக்கொண்டு ராணுவத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெளியே வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும் ஆண் பெண் என்பதைத் தாண்டி ஒரு உயிர் மற்றொரு உயிர் மேல் வைக்கும் காதலை ஆண்-பெண் காதலைப் போன்றே சமமாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார் லி லி சென்னை (26) மணமுடித்த ராணுவ அதிகாரி சென் சிங் யுவான் (27) கூறியுள்ளார். சென் தன்னுடைய கையில் ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் குறியீடான வானவில்லை குறிக்கும் தன் கைப்பட்டையாக (wristband) அணிந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி ராணுவ தளம் அமைந்திருக்கும் வடக்கு டாவோயுவன் எனும் பகுதியில் நடைபெற்றுள்ளது. அந்த ஜோடி ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது பின் உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் முன் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

மற்றொரு ஜோடியான் யுமி மெங் (37) மற்றும் வாங் யி (36) மோதிரம் மாற்றிக் கொள்ளும்போது கண்ணீர் வடித்தனர். இதில் வாங் மற்றும் தான் ராணுவத்தைச் (மேஜர்) சேர்ந்தவர். வாங் ராணுவ உடையிலும் மெங் கல்யாண உடையிலும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மெங்கினுடைய பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு ஆதரவாக அவருடைய ஆசிரியர் அவர் திருமணத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வாங்கினுடைய தாயார் ஏமி சாவ் ”இது ராணுவத்தில் நடந்த மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஒரே பாலின ஈர்ப்பை அங்கீகரிக்கும் சட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய இந்த ஜோடி எதிர்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (heterosexual couple) வேண்டுமானாலும் இந்தச் சட்டம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், எங்களுக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது எனக் கூறியுள்ளனர். ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் கல்யாணம் சட்டம் ஆன பின் 4021 ஒரே பாலினக் கல்யாணம் நடந்துள்ளதாகவும் அதில் 69% பெண்கள் ஜோடி (லெஸ்பியன் திருமணம்) என அரசாங்கத்தின் தரவுகள் கூறியுள்ளனர்.

ஒரே பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான ஒரு நிறுவனமாகவே ராணுவம் இருந்து வந்துள்ளது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அது மாறியுள்ளது எனத் தைவான் சிவில் பார்ட்னர்ஷிப் உரிமைக்கான கூட்டணியின் நிறுவனர் விக்டோரியா சு தெரிவித்துள்ளார். ஒரே பாலின ஈர்ப்பாளர்களிடம் ராணுவம் மற்றும் அதன் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் ராணுவம் எல்ஜிபிடி சமூகத்திற்கு ஆதரவான நல்ல சமிக்ஞைகளை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வு முழுவதும் அவர்கள் அவ்வாறே நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ராணுவ உயர் அதிகாரி யாங் “இன்று திருமணமான அனைத்து ஜோடிகளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு அனைவரும் சமமாகவே நடத்தப்படுவர் எனவும் கூறினார். மேலும், தைவானின் ராணுவம் காலத்திற்கு ஏற்ப திறந்த மனதுடன் முற்போக்குடன் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தி இந்துவில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்