Aran Sei

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு அதிகரிப்பு

Image Credit : poynter.org

ன்முறை தாக்குதல் நடத்தப்படலாம் என்ற போலீஸ் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புத் துறையும், ஒன்றிய புலனாய்வு அலுவலகமும் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “ஆயுதப் படை வன்முறை தீவிரவாதிகள்” என்ற குழு, “மார்ச் 4 வாக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தை கைப்பற்றி ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளை அகற்றுவது” குறித்து பிப்ரவரி மாதம் விவாதித்தாகக் கூறப்பட்டிருந்தது.

QAnon என்ற சதிக் கோட்பாடு குழுவின் ஆதரவாளர்கள் மார்ச் 4 அன்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்பார் என்று நம்புகின்றனர் என்று தி ஹிந்து கூறுகிறது. 1933-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் புதிய அதிபர் மார்ச் 4-ம் தேதிதான் பதவி ஏற்பது நடைமுறையாக இருந்தது.

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப், இப்போது அதிபர் பதவியில் இருக்கும் ஜோ பைடனிடம் தோற்றுப் போயிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – முழுமையடையாத வெற்றி அறிவிப்பு

இதைத் தொடர்ந்து ஜனவரி 6-ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்கான நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டம் கலைக்கப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

அதன் பிறகு, நாடாளுமன்றம் மீண்டும் கூடி தேர்தல் முடிவை அங்கீகரித்த பிறகு, ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக 300 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஆயுதக் கும்பல் குழுக்களான “வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள்”, “3 சதவீதத்தினர்” ஆகியவற்றின் உறுப்பினர்கள் இருந்தனர் என்கிறது தி ஹிந்து.

வன்முறை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை வியாழக்கிழமை திட்டமிட்டிருந்த அமர்வை ரத்து செய்து விட்டது. ஆனால், நாடாளுமன்ற மேலவையான செனட் அதிபர் ஜோ பைடனின் $1.9 லட்சம் கோடி கொரோனா நிவாரண மசோதா மீது விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்

பொது பாதுகாப்பை உறுதி செய்ய நகரம் முழுவதும் கூடுதல் படைகள் அனுப்பப்படும் என்று வாஷிங்டன் நகரத்தின் போலீஸ் தலைவர் ராபர்ட் கான்டி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்