Aran Sei

’தமிழ் மக்களின் வாழ்வுரிமையை காக்க வேண்டும்’ : அடக்குமுறைகளை தாண்டி நிறைவடைந்த பேரணி

லங்கையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்திய மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று (பிப்ரவரி 7) இரவு யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ளது.

இலங்கை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் தொடங்கி, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிகண்டி வரை, நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், கடந்த 3-ம் தேதி புதன்கிழமை பொத்துவிலில் ஆரம்பமாகி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி வழியாக  யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளது.

நன்றி : தமிழ்வின்

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: கூலி உயர்வு வேண்டி கடையடைப்பு

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உலகநாடுகள் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு  வடகிழக்கு தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்பி வைத்த கோரிக்கையை நிறைவேற்றவேண்டும், வடக்கு-கிழக்கில் காணி (நிலம்) விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கவேண்டும், இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கையான ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பல்வேறு வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து, வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் அதிரடி

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் தாயகத்தில் இடம்பெறும் மக்கள் பேரெழுச்சிப் போராட்ட வடிவங்களில் முதன்மை இடத்தை இந்தப் போராட்டம் பெற்றுள்ளது. காவல்துறையினரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் போராட்டம் தனது இலக்கை அடைந்துள்ளது. வடக்கு-கிழக்கு தாயகம் முழுவதுமாக ஐந்து தினங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் பிரகடனம் வாசிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தமிழ்வின்

அதில், “தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும். அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும். இதன்நோக்கில், தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம்.” என்று உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்