Aran Sei

பாகிஸ்தான் புதிய வரைபடம்: அஜித் தோவல் வெளிநடப்பு

credit: hindustantimes.com

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நேற்று நடத்திய கூட்டத்திலிருந்து பாகிஸ்தானை கண்டிக்கும் விதமாக வெளியேறினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டத்தில் பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை காண்பிப்பது பற்றிய பிரச்சினை சில நாட்களுக்கு முன்பு இந்த கூட்டத்துக்கான சோதனை முயற்சியின் போது தொடங்கியது. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை கவனத்த இந்தியா, கூட்டத்தை நடத்து ரசியாவிடம் இது தொடர்பாக தனது எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் தரப்பு வரைப்படத்தை நீக்க மறுத்துவிட்டது என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் DAWN செய்தித்தாள் தெரிவிக்கிறது.

நேற்று நடந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், ஜம்மு காஷ்மீர் பகுதியை உள்ளடக்காத இந்திய வரைபடத்தை காண்பித்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அஜித் தோவல் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியாக காட்சிப்படுத்தும் புதிய வரைபடத்தை பாகிஸ்தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதாக குறிப்பிடுகிறார்.

இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல். எனவே, கூட்டத்தை நடத்தும் ரசியாவிடம் ஆலோசனை செய்த பிறகு பாகிஸ்தான் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியத் தரப்பு கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், இந்தியாவின் எதிர்வினை “கெடுவாய்ப்பானது” என்று கூறினார்.

credit: dailyo.in
credit: dailyo.in

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மாற்றப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தான் தனது புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடம் ஜம்மு காஷ்மீர் பகுதியை சச்சரவுக்குள்ளான சித்தரித்ததுடன் சியாச்சினை பாகிஸ்தானின் பகுதியாகவும் சித்தரிக்கிறது.

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தில் சர் க்ரீக் மற்றும் முன்னாள் ஜுனாகத் சமஸ்தானத்தின் சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்