Aran Sei

மருத்துவ நோபல் : ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்கு

credits:cgtn

மருத்துவத்துகான நோபல் பரிசு பெரும் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. 211 தனிநபர்களும் 107 அமைப்புகளும் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஹெப்படைடிஸ் சி வைரஸை கண்டறிந்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வே ஜெ ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஹாட்டன் ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில்,

”வரலாற்றில் முதன்முறையாக, இனி ஹெப்படைடிஸ் சி வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியும்.

 

நாள்பட்ட ஹெப்படைடிஸ் பாதிப்புக்கான காரணியாக இருப்பது இந்த வைரஸ் என்ற கண்டுபிடிப்பு, புது மருந்துகளுக்கும் ரத்த பரிசோதனை முறைகளுக்கும் வழிவகுத்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது.” என்று கூறியுள்ளது.

சிரோஸிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயினை உண்டாக்கக் கூடிய இரத்தத்தில் உருவாகும் ஹெப்படைடிஸ் வைரஸ், சர்வதேச அளவில் பெரும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய்க்கிருமி.

1940-களில் நோய்த்தொற்று விளைவிக்கும் தன்மையுள்ள இரு ஹெப்படைடிஸ் வைரஸ் (ஹெப்படைடிஸ்  ஏ வைரஸ், ஹெப்படைடிஸ்  பி வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த பி வைரஸ், ஹெச்ஐவி, காச நோய் போலவே உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

1960-களில் ஹெப்படைடிஸ் பி வைரஸ்-க்கான பரிசோதனைகளும் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 1976-ம் ஆண்டில் ஆராய்ச்சிராயாளர் புளூம்பெர்க் அதற்காக நோபல் பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டார்.

ஆனாலும், பல நோயாளிகளில் ஹெப்படைடிஸ் குணப்படுத்த முடியாமல் இருந்து வந்தது. அதற்கான காரணம் கண்டறியப்பட முடியவில்லை. பெருவாரியானவர்கள், அறியப்படாத நோய்க்கிருமியால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இந்த வகை நோய்த்தொற்று ‘ஏ-பி வைரஸ் அல்லாத ஹெப்படைடிஸ்’ என்று மட்டும் வகைப்படுத்தப்பட்டது. இதைக் கண்டுபிடிப்பது மிக அவசியமாக கருதப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர்களின் டிஎன்ஏ-வை பரிசோதனைக்கு உட்படுத்தி பல ஆண்டுகள் தொடர் முயற்சிக்கு பிறகே ஹெப்படைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் பரப்பும் வைரஸ்களை எதிர்கொள்வதில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்