Aran Sei

26 கோடியில் பிரிட்டிஷ் பிரதமருக்கு ஊடக அறை – ” செவிலியருக்கு ஊதிய உயர்வு கொடுக்க பணமில்லை எனும் அரசின் பண விரயம் “

Image Credit : theguardian.com

பிரிட்டிஷ் பிரதமரின் ரூ 26 கோடி செலவிலான (பிரிட்டிஷ் பவுண்ட் 26 லட்சம்) செய்தித் தொடர்பு அறை தயாராகி விட்டது என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது “பண விரயம்” என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் டோரிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஒரு அரசு அதிகாரி, இந்த அறை, “ஒரு மோசமான திருமண நிகழ்ச்சி நிறுவனத்தின் விளம்பர அறிக்கை” போல உள்ளதாக கிண்டல் செய்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

“பழமைவாதிகள் (டோரிக் கட்சியினர்) தங்களது பணத்தை மீண்டும் வீணாக்கியுள்ளனர்” என்று வரி செலுத்தும் பொதுமக்கள் கருதுவார்கள் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் கூறியதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

அரசிடம், தேசிய மருத்துவ பணியைச் சேர்ந்த “செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதற்கு பணம் இல்லாத நேரத்தில்” இந்த செலவு செய்யப்படுகிறது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் – திட்ட செலவு 13,450 கோடியாக உயர்வு

ரூ 26 கோடி செலவில் 7 மாதங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த அறையின் புகைப்படங்களை ஐடிவி வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஊடகச் செயலாளர் அலக்ரா ஸ்ட்ராட்டன், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று தி கார்டியன் கூறுகிறது.

இந்த அறையில் ஆடியோ-வீடியோ கருவிகள் பொருத்தப்படுவதற்கு அவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று அமைச்சரவை அலுவலகம் சமீபத்தில் நியாயப்படுத்தியிருந்தது.

அலக்ரா ஸ்ட்ராட்டன் பிபிசியிலும் தி கார்டியனிலும் முன்பு பணியாற்றியவர், பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கின் தகவல் தொடர்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமும், பிரதமரின் செய்தித் தொடர்பாளரும் ஊடகச் செயலாளரும் காமராக்கள் இல்லாமல் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருவதற்கு பதிலாக, இந்த அமெரிக்க பாணி நவீன ஊடக அறை உருவாக்கப்பட்டுள்ளது.

‘எங்கள் குடியரசு தின விழாவிற்கு வர வேண்டாம்’ – பிரிட்டன் பிரதமருக்கு விவசாயிகள் கோரிக்கை

இதன் மூலம், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஊடக செயல்தந்திரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது தெளிவாவதாக தி கார்டியன் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்