Aran Sei

`வலதுசாரி சித்தாந்தத்தை நம்பித் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்’ – நியூலாந்து விசாரணை ஆணையம்

credits : indian express

”இஸ்லாமிய மக்களின் குடியேற்றத்தால் மேற்கத்திய சமுதாயத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனும் சித்தாந்ததை நம்பி தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளார்” என நியூலாந்து விசாரணை ஆணையம் சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் பிற்பகல் 1:40 மணியளவில் அல் நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வுட் இஸ்லாமிய மையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. வெள்ளித் தொழுகையின் போது நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டரண்ட் எனும் நபர் இந்தத் தாக்குல்களை நடத்தியுள்ளார். இந்த முழுத் துப்பாக்கிச்சூட்டையும், தனது தலையின் மேல் பொருத்தப்பட்டிருந்த படப்பிடிப்புக் கருவி மூலம் படம்பிடித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் (live) நேரடியாக ஒளிபரப்பினார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

credits : arab news
credits : arab news
credits : cnn
credits : cnn

 

இதையடுத்து பள்ளிவாசலில் இருந்த நபரின் உதவியுடன் நியுசிலாந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பள்ளிவாசலை எரித்து தரைமட்டமாக்குவதுதான் திட்டம் என விசாரணையில் பிராண்டன் டராண்ட் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்க்கபட்டார்.

கொலை, கொலை முயற்சி, தீவிரவாதம் என 92 வழக்குகளில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட பிரெண்டன் டரண்ட் ”கருணையற்றவர்” என்றும் அவர் நடத்திய தாக்குதல் ”மனிதாபிமானமற்றது” என இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அவருக்குப் பிணையற்ற வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

credits : times
credits : times

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொது விசாரணை நடத்தி 800 பக்க அறிக்கையை அரசு விசாரணை ஆணையம் (royal commission of inquiry) சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்கள், சர்வதேச வல்லுநர்கள், பாதுகாப்பு ஏஜென்சிக்கள் என நூற்றுக்கணக்கானவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மீது வெறுப்பு குற்றம் – டெல்லி போலீஸ் எஃப்ஐஆர் பதிவு

ஒரு குழந்தையாக, டாரன்ட் பெற்றோர்கள் மேற்பார்வையின் கீழ் இல்லாத, இணைய வசதியைப் பெற்றுள்ளார். அவர் சிறு வயதிலிருந்தே இனவெறி கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார் எனவும் தன்னுடைய 14-வது வயதிலிருந்தே 4chan எனும் வலைதளத்தை (பயன்படுத்துவது யாரேன்ற கண்டுபிடிக்க முடியாத வலைதளம்(anonymous website)) பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது தந்தை ரோட்னி நுரையீரல் புற்றுநோய் காரணமாக, 2010-ம் ஆண்டில் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் டாரண்டிற்கு 339,000 (இந்திய மதிப்பில் 1,85,36,000 ரூபாய்) ஆஸ்திரேலிய டாலர்களைச் சொத்தாக டாரண்டிற்கு விட்டுச் சென்றுள்ளார்.

பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்

டராண்ட் தனிமை விரும்பியாக இருந்துள்ளார். சீனா, ஜப்பான் , ரஷியா, வட கொரியா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த அவர் 2017-ம் ஆண்டு நியூசிலாந்திற்கு வந்துள்ளார். தந்தையிடமிருந்து பெற்ற பணம் மற்றும் அவருடைய சேமிப்பைக்கொண்டு துப்பாக்கி உரிமம் பெற்ற அவர், 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு வந்தவுடனேயே துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் வாங்கத் தொடங்கியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

credits : the guardian
credits : the guardian

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டரண்ட் அதிக காலம் தங்கியிருந்தது இந்தியாவில்தான். 2015 நவம்பர் 21 முதல் 2016 பிப்ரவரி 18 வரை ஏறக்குறைய மூன்று மாதம் வரை இந்தியாவில் தங்கியிருந்திருக்கிறார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரெண்டன் டராண்ட் தீவிர வலதுசாரி வலைத்தளங்களைப் பின் தொடர்பவராக இருந்துள்ளார். அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வலதுசாரி விஷயங்களைப் பதிவிட்டிருக்கிறார். வெளிநாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி குழுக்களுக்கும் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

வலதுசாரி யூடியூப் சேனல்களின் சந்தாதாரராக இருந்துள்ள அவர் “குடியேற்றம், தீவிர வலது அரசியல் கோட்பாடுகள், கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான வரலாற்றுப் போராட்டங்கள்” ஆகியவற்றைப் பற்றி அதிகம் படித்துள்ளார் எனவும் இணையத்தில் தன்னை ஒரு வெள்ளை இனவாதி எனவும் ஐரோப்பா முழுவதும் பரவி வாழ்ந்துகொண்டிருக்கிற இஸ்லாமியர்களைப் பழிவாங்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் மருத்துவரைச் சந்தித்த அவர் ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொண்டதாகவும், வாரத்திற்கு பல முறை டெஸ்டோஸ்டிரோன் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் மருத்துவரிடம் கூறியுள்ளார். இவ்வாறு செய்யக் கூடாது என மருத்துவர் கொடுத்த பரிந்துரையை ஏற்க மறுத்த அவர் மருத்துவரிடம் வருவதை நிறுத்திக்கொண்டுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், அவர் ஒரு துப்பாக்கி விபத்தில் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் மருத்துவமனையினால் சிகிச்சை பெறுவது காவல்துறையை எச்சரிக்கக்கூடும் என்று கவலைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காயம் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கியால் மிரட்டிய வலதுசாரி வன்முறையாளர் – இஸ்லாமிய பயங்கரவாதி என அவதூறு பிரச்சாரம்

17 ஆகஸ்ட் 2017 அன்று டரண்ட் நியூசிலாந்தில் வசிக்க வந்தபோதே அவர் தீவிரவாதச் சிந்தனையையேற்று பெரிய மாற்றுக் கோட்பாட்டை (great replacement theory) ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டுள்ளார். இஸ்லாமிய மக்களின் குடியேற்றத்தால் மேற்கத்திய சமுதாயத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனும் சித்தாந்ததை நம்பி தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னதாக, அவர் தனது டிஜிட்டல் தடம் சிலவற்றை மறைக்க முயன்றுள்ளார். ஆனால், விசாரணை அதிகாரிகள் அவரது உளவு முயற்சிகள், திட்டமிடல் மற்றும் அவரது தாக்குதலுக்கான தயாரிப்பு ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அரசு விசாரணை ஆணையத்தின் 800 பக்க அறிக்கை வெளியான பின்னர் பேசிய பிரதமர் ஜேசிந்தா ஆர்டெர்ன் “தாக்குதலைத் தடுத்து நிறுத்தியிருக்கும் எந்த விஷயமும் விசாரணையில் கிடைக்கவில்லை. இவை இரண்டுமே (தாக்குதல், தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்வது) தோல்விகள்தான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அல் நூர் மசூதியின் இமாம், இஸ்லாமிய சமூகத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அதிகாரிகள் அதன் மீது சந்தேகக் கண்ணோடு இருப்பதை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களாக இருக்கும் வரை, பிரெஞ்சுக்காரர்களாக இருக்க முடிவதில்லை

“இஸ்லாமிய சமூகத்தின் மீதான வெறுப்பு பரப்பப்பட்டு நாங்கள் குறிவைக்கப்படுவதை நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இந்த அறிக்கை நாங்கள் சொல்வது சரிதான் என்பதைக் காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார். “அரசு நிறுவனங்களில் உள்ளவர்களும் பக்க சார்போடு இருக்கிறார்கள் எனவும் சார்பு நிலவுவதாகவும் அது மாற வேண்டும் என்றும் அறிக்கை காட்டுகிறது” என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அரசாங்கம் புதிய தேசியப் புலனாய்வு அமைப்பை நிறுவ வேண்டும் என 44 பேர் பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்