Aran Sei

`நான் முதல் பெண்தான்; கடைசிப் பெண்ணல்ல’ – வெற்றிக்குப் பின் கமலா ஹாரிஸ்

வம்பர் 7 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நவம்பர் 7 ஆம் தேதி, எடிசன் ரிசர்ச் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சிகள், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில் முடிவைக் கணித்துள்ளன. அதேநேரம், தற்போதைய அதிபரான குடியரசுக் கட்சியின் டொனால்டு  ட்ரம்ப், நீதிமன்றங்களில் சட்டப்பூர்வமாகப் போராடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசின் கருப்பின வேர்கள்

கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவில் இருந்தும், தந்தை ஜமைக்காவிலிருந்தும் குடிபெயர்ந்து வந்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த செனட்டரான கமலா ஹாரிஸ், சான் பிரான்சிஸ்கோவின் முதல் பெண் மாவட்ட வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். மேலும் கலிபோர்னியாவில் சட்ட ஆலோசகராக ஆன முதல் பெண் இவர்.

இந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்களால் அமெரிக்கா பதற்றத்தில் இருக்கும் சமயத்தில், இன ரீதியிலான சமத்துவத்திற்கும் சட்டரீதியிலான கொள்கைகளை வடிவமைக்கவும், ஜோ பைடனின் நிர்வாகத்திற்குக் கமலா ஹாரிஸின் இந்தப் பின்னணி உதவும் என்று ‘தி இந்து’  இணையதளம் தெரிவித்துள்ளது.

`டிரம்ப்பின் விசா முடிவில் நீங்களும் சிக்கியிருக்கலாம்’ – ஜோ பிடன்

“பைடனுடைய நிர்வாகத்தில் ஹாரிஸ் துணை எப்போதுமே அர்த்தமுள்ளதாக இருந்தது. ஏனென்றால், இன ரீதியாகவும், தலைமுறைகளுக்கு இடையேவும் ஜனநாயக முறையில் முடிவுகளை எடுக்கும் திறமை அவரிடம் இருந்தது.” என்று 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஹிலாரிக்கு ஆலோசகராகப் பணிபுரிந்த ஜோயல் பெய்ன் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கு எதிரான விவாதத்தில், “ஜோவும் (ஜோ பைடனும்) நானும் ஒரே விதமாக வளர்ந்தோம்.” என்று கமலா ஹாரிஸ், ஜோ பைடனைப் பற்றிக் கூறியுள்ளார். “கடின உழைப்பு, அனைத்து மக்களுக்கான பொது சேவை, அவற்றைப் பெற போராடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலுடன் நாங்கள் வளர்க்கப்பட்டோம்.” என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்டை மினியாபோலிஸ் காவல்துறை கொன்றது. அதற்கு அமெரிக்க செனட்டில் உள்ள ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணான கமலா ஹாரிஸ், இன நீதி மற்றும் காவல் துறையில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தம் குறித்துக் குரல் கொடுத்துள்ளார். வாஷிங்டனின் வீதிகளில் போராடும் மக்களுடன் கைகோத்து நின்றுள்ளார்.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொலை – பற்றி எரியும் ஃபிலடெல்ஃபியா

கமலா ஹாரிஸ், 2024 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக வெளிப்படையாக அறியப்படுகிறார். 2021 ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்பு விழாவில், 78 வயதாகும் ஜோ பைடன் இரண்டாவது முறையாகப் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் என்று ‘தி இந்து’  செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோ பைடனும் கமலா ஹாரிஸும் இணைந்து பொதுமக்களிடம் உரையாற்றினர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், ”வெற்றிக்காக உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி. மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி இருக்கின்றனர். இன்று மிகவும் பொறுப்பான ஒரு பெண்ணுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அது என் அம்மாவான ஷியாமளா கோபாலன் ஹாரிஸ்தான். அவர் தனது 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தபோது இந்த நிலையை எட்டுவோம் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் இதுபோன்ற தருணம் அமெரிக்காவில் சாத்தியமாகும் என அவர் ஆழமாக நம்பினார்.” என்று கூறியுள்ளார்.

ஜோ பைடன் ஒரு போர்க் குற்றவாளியா?

மேலும், “நான் அமெரிக்கத் துணை அதிபராகியுள்ள முதல் பெண்ணாக இருக்கலாம். ஆனால் கடைசிப் பெண் அல்ல. கறுப்பினப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்படும். 55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளனர். அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம். ஒபாமா வழியில் அமெரிக்காவின் நலனுக்காகச் செயல்படுவேன்.” என்று பேசியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்