Aran Sei

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – டிரம்ப் காலத்திய முடிவுகள் பல மாற்றப்படுகின்றன

ஜோ பைடன் - Image Credit : theguardian.com

மெரிக்க அதிபர் ஜோ பைடன், முந்தைய டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் பல முக்கியமான நடவடிக்கைகளை ரத்து செய்யும் வகையில், நிர்வாக ஆணைகளை பிறப்பித்துள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன் – வரலாறு படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இந்த ஆணைகளின் மூலமாக ஜோ பைடன் முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

1. பருவநிலை மாற்றம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்ததில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளார். டிரம்ப் அரசு இந்த சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகியது சர்வதேச அளவில் அமெரிக்காவை ஒதுக்கி வைக்கப்பட்ட நாடாக மாற்றியது என்று தி கார்டியன் கூறுகிறது.

தொழில்மயமாக்கலுக்கு முந்தைய சகாப்தத்தில் இருந்ததை விட 1.5 டிகிரி அதிக வெப்பநிலை என்ற அளவில் வெப்பமயமாதலை மட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த உடன்பாடு 2015 பாரிசில் எட்டப்பட்டது. டிரம்ப் 2017-ல் அதிபர் பதவி ஏற்றதும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்து விட்டார்.

‘நிவார்’ புயல் – இது பருவநிலை மாற்றத்தின் பேராபத்து – அருண்குமார் ஐயப்பன்

2. சுற்றுச் சூழல் பாதுகாப்பு

கீஸ்டோன் XL குழாய் பதிப்பு திட்டத்துக்கான உரிமத்தை ரத்து செய்திருக்கிறார். இந்தத் திட்டம் சுற்றுச் சூழலை பாதிப்பதாகவும், அறிவியல் ஆதாரமற்றது என்றும் எதிர்க்கப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் கனடாவிலிருந்து பெரும் அளவிலான கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படும்.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள உடா மாநிலத்தின் பியர்ஸ் இயர்ஸ், கிராண்ட் ஸ்டேர்கேஸ் எஸ்கலன்டே பகுதிகளில் உள்ள மிகப் பரந்த தேசிய சின்னங்களிலும், ஆர்ட்டிக் தேசிய வனவிலங்குகள் பாதுகாப்பு பகுதியிலும் கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு தேடுவதற்கான பணியையும் ஜோ பைடன் நிறுத்தி வைத்துள்ளார்.

பியர்ஸ் இயர்ஸ், கிராண்ட் ஸ்டேர்கேஸ் எஸ்கலன்டே பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சுருக்கும் டிரம்ப் அரசின் முடிவும் மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் : மக்கள் போராட்டத்தின் எதிரொலி – கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

3. வெளியுறவுக் கொள்கை

  • முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து பயணத்துக்கு டிரம்ப் விதித்திருந்த தடை ரத்து செய்யப்படுகிறது.
  • தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பை ஜோ பைடன் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இந்த நெருக்கடி நிலை பிரகடனத்தின் கீழ் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரும் மக்களை தடுத்து நிறுத்துவதற்கு சுவர் கட்ட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார் டொனால்ட் டிரம்ப்
  • ஜோ பைடன் அதிபரான பிறகு சீன-அமெரிக்க உறவுகள் மேலும் நிலைத்தன்மை உடையதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் மாறும் என்று சைனா டெய்லி பத்திரிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிரம்பின் “நச்சுத்தனமான சீன எதிர்ப்பு பிரச்சாரம்” முடிவுக்கு வந்தததை வரவேற்றுள்ள குளோபல் டைம்ஸ் பத்திரிகை, தனக்கு முந்தைய அதிபரின் சீனா கொள்கைகளை மாற்றும்படி அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    சீன-அமெரிக்க உறவுகள் சீர்கெட்டது டிரம்ப் ஆட்சி காலத்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான அம்சமாக இருந்தது என்பதை தி கார்டியன் சுட்டிக் காட்டியுள்ளது.

சீன நிறுவனங்களை நீக்கிய அமெரிக்கா : பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்த சீனா

4. கொரோனாவை கட்டுப்படுத்துவது

  • ஒன்றிய கட்டிடங்களிலும், நிலங்களிலும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளார்.
  • கொரோனா எதிர்வினை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கியுள்ளார்.

கொரோனா கடவுள் அளித்த வரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

5. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதிகள் சபையில் இடங்களை ஒதுக்கும் போது, மக்கள் தொகை தரவுகளில் இருந்து ஆவணங்கள் இல்லாத புலம் பெயர்ந்தவர்களை ஒதுக்கி வைக்கும் டிரம்ப் அரசின் முயற்சிகளையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் – கருப்பினப் பெண்ணின் வேர்களைத் தேடி

அதிபர் பதவி ஏற்ற முதல் நாளில் ஜோ பைடன் 17 நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார், அவற்றில் 15 நிர்வாக ஆணைகள் என்று தி கார்டியன் குறிப்பிடுகிறது.

“நாம் எடுக்கவிருக்கும் பல நடவடிக்கைகள் துணிச்சலானவையும் முக்கியமானவையும் ஆகும். அவற்றை இன்றே தொடங்குவது சரியானது” என்று இந்த ஆணைகளில் கையெழுத்திடுவதற்கு முன்பு ஜோ பைடன் கூறியுள்ளார்.

வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?

ஜோ பைடன் அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்த அதே நாளில், ஜார்ஜியாவில் நடந்த மேலவை (செனட்) உறுப்பினர்களுக்கான மறுதேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ரெவரண்ட் ரஃபேல் வார்னாக், ஜோன் ஓசாஃப் ஆகியோர் அதிகாரபூர்வமாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையிலும் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவு தெரிவதில் தாமதம் ஏன்? – நவநீத கண்ணன்.

மேலவையில் 50 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், 50 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். அதன் தலைவராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருப்பதால், குறிப்பிட்ட வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு/ஆதரவு வாக்குகள் சமமாக இருந்தால் கமலா ஹாரிசின் சமநிலை உடைக்கும் வாக்கு தீர்மானமானதாக அமையும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்