Aran Sei

ஜோ பைடனுக்கு இந்திய அமெரிக்கர்கள் கடிதம் – ஆர்எஸ்எஸ் தொடர்பாக எச்சரிக்கை, சாதி பாகுபாட்டை தடை செய்ய கோரிக்கை

Image Credit : nationalheraldindia.com

ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கு இந்திய அமெரிக்கர்களின் ஒரு குழு கடிதம் எழுதியுள்ளது. இந்தக் குழுவில் பல மனித உரிமை அமைப்புகளும், அம்பேத்கரிஸ்டுகளும் இணைந்துள்ளனர்.

ஜாதி : உலகப் பெருந்தொற்று -கிருபா முனுசாமியின் புதிய தொடர்

மோடி அரசாங்கம் தனிநபர் சுதந்திரங்களை மறுப்பதையும், சிறுபான்மையினரை வெளிப்படையாக ஒடுக்குவதையும், தலித்துகள் மீதான வன்கொடுமைகளையும் சுட்டிக் காட்டிய அக்குழுவினர், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மசோதாவான தீர்மானம் 745-க்கு ஆதரவு திரட்டுமாறு ஜோ பைடனை கேட்டுக் கொண்டுள்ளனர் என்று நேஷனல் ஹெரால்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

“ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறும், பெருமளவிலான சிறையடைப்புகளை கைவிடுமாறும் அனைத்து குடிமக்களுக்கும் மதச் சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும்” அந்தத் தீர்மானம் இந்தியாவை வலியுறுத்துகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ஜோ பைடன், “காஷ்மீர் மக்களின் உரிமைகளை திரும்ப வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். அமைதியான போராட்டங்களை தடுப்பது, இணையத்தை தடை செய்வது அல்லது இணைய வேகத்தைக் குறைப்பது போன்ற எதிர்ப்பை தெரிவிப்பதன் மீதான தடைகள் ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும்” என்று கூறியிருந்தார் என்பதை நேஷனல் ஹெரால்ட் சுட்டிக் காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீரில் அதிவேக இணையப் பயன்பாடு (4ஜி) முடக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மோடி அரசு இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு முடிவு கட்டியுள்ளது என்று கூறியுள்ள இந்திய அமெரிக்கர்களின் குழு, “நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான திட்டத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது குடியுரிமை திருத்தச் சட்டம் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் குடியுரிமையை அச்சுறுத்துகிறது” என்று கூறியுள்ளனர். இதற்கு எதிராக ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கவலை வெளியிட்டிருந்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான 140 மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன

“பாஜக, ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பின் துணை அமைப்பாகும். ஆர்எஸ்எஸ் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமேயான நாடு என்றும் பிற சிறுபான்மை குழுக்களை எதிரிகளாகவும் ஊடுருவல்காரர்களாகவும் அது கருதுகிறது” என்று அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.

ஆட்சி நிர்வாகத்தில் இணைந்து கொள்ள முயற்சிக்கும், அறிவுரை அளிக்கும் அனைவரையும் கவனமாக பரீசிலிக்குமாறும், குறிப்பாக, “ஹிந்து பெருமிதவாத குழுக்கள் உட்பட எந்த விதமான பெருமிதவாத குழுக்களையும் சேர்ந்த நபர்கள் எந்த விதத்திலும் அனுமதிக்கப்படக் கூடாது” என்றும் அவர்கள் ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

‘ வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும் பட்டேலும்

இந்திய அமெரிக்கர்களின் இந்தக் குழு, சிவில் உரிமைகள் சட்டத்தின் கீழும், நிறுவன கொள்கைகளிலும், சாதியை ஒரு பாதுகாக்கப்பட்ட வகையினமாக சேர்க்கும்படி ஜோ பைடனை கேட்டுக் கொண்டுள்ளது.

சாதிய ஒடுக்குமுறை – சிஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான வழக்கு திரும்ப பெறப்பட்டது

சாதியை சிவில் உரிமைகள் சட்டம் 1964-ன் தலைப்பு VII-ன் கீழ் பாகுபாட்டை கொண்டு வரும் காரணி என சேர்க்கும்படி, சாதிக்கு எதிரான இந்திய அமெரிக்கர்களின் கூட்டணி, நீண்ட காலமாகவே கோரி வந்துள்ளதாக நேஷனல் ஹெரால்ட் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்