Aran Sei

பாகிஸ்தான் இந்து கோயில் தாக்குதல் : 100 பேர் கைது 350 பேர் மீது எஃப்ஐஆர்

credits : the hindu

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான கரக்கில் கடந்த புதன்கிழமையன்று 31-12-3-20 தீவிர அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சியான ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைமையிலான கும்பல் இந்து கோவிலுக்குத் தீ வைத்து இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை இந்து சமூகத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் இருந்த கோயிலைப் புதுப்பிக்க இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதையடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் மத விவகார துறை அமைச்சர் நூருல் ஹக் காத்ரி கோயில் மீதான தாக்குதலை ” மத நல்லிணக்கத்திற்கு எதிரான சதி” என்று கூறியுள்ளார்.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

“சிறுபான்மை மதக் குழுக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை” என்றும், “சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது நமது மத, அரசியலமைப்பு, தார்மீக மற்றும் தேசிய பொறுப்பு” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

” விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்று சொல்வதா! ” – பாஜக அமைச்சருக்கு கண்டனம்

பாகிஸ்தான் சிறுபான்மையினர் மீது “தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கு” எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசு பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.

1000 கோடி மதிப்பீட்டில் இந்து கோயில் : இஸ்லாமாபாத்தில் கட்ட அனுமதித்த பாகிஸ்தான் அரசு

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், “பாகிஸ்தானில் உள்ள கோவில் நாசம் செய்யப்படுவது இது முதன்முறையல்ல. கோவிலை சேதம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளதாக தி டெலிகிராஃப் தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் மக்களை அவதூறாக பேசிய குற்றச்சாட்டு – ரிபப்ளிக் சேனலுக்கு அபராதம் விதிப்பு

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஏழு முன்னணி தலைவர்கள் (மெளலானா இம்தாதுல்லா, மெளலானா அமனுல்லா, மெளலானா மாதியுல்லா, மெளலானா முகமது ஹகீம், மெளலானா அன்வர் சமான்) உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 350 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என இந்த வழக்கை விசாரித்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜாஹிர் ஷா தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் – பாகிஸ்தான் திரும்பும் இந்து மற்றும் சீக்கிய அகதிகள்

மேலும் இந்த சம்பவம் குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் கோயிலுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும் அதனை சீரமைப்பதற்கும் இந்து சமூகத்துடன் கலந்தாலோசிப்பதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இன்னும் 10 நாட்களில் விசாரித்து சமர்ப்பிக்க அந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்