Aran Sei

பாசிஸ்ட் கட்சியின் தலைவருக்கு ஆயுள் தண்டனை – கிரேக்க நீதிமன்றம் அதிரடி

Image Credits: Financial Times

ரு கிரிமினல் அமைப்பைப் போல் கட்சியை நடத்துவதாகக் கூறி தீவிர வலதுசாரி கட்சியான கோல்டன் டானின் தலைவர்களை சிறையில் அடைக்கக் கிரேக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கட்சியின் 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேருக்குத் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டுள்ளது.

கோல்டன் டான் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் இரண்டு வாரக் காலமாக ஆஜரான வழக்கறிஞரின் வாதங்களை கேட்டபின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

1980 களில் ஒரு புதிய நாஜி குழுவாக நிறுவப்பட்ட இந்தக் கட்சி கிரேக்கத்தின் நிதி நெருக்கடியின் போது முக்கியத்துவம் பெற்றது. புலம்பெயர்ந்தோர் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மீது வெறுப்புணர்ச்சியோடு பல திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியதாக கோல்டன் டான் மீது குற்றம் சாட்டப்பட்டது. தண்டனை பெற்ற 11 முன்னாள் கட்சித் தலைவர்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைத்துள்ளது.

2013 ஆம் ஆண்டு, இடதுசாரி கிரேக்க ராப் பாடகர் பாவ்லோஸ் ஃபிஸ்ஸாஸைக் கொன்றது, எகிப்திய மீனவர்கள் மற்றும் இடதுசாரி ஆர்வலர்கள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் உட்பட நான்கு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாவ்லோஸ் ஃபிஸாவிவை கொலை செய்த, ஜியோர்கோஸ் ரூபகியாஸ், ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் உத்தரவில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்