Aran Sei

இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஸ்லாம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை கூறிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக டிவிட்டரில், மேக்ரான் ஒரு பிசாசு “MacronTheDevil” “ShameOnYouMacron”, “Boycott_French_Products” ஆகிய ஹாஷ் டேக்குகள் உலக அளவில் டிரண்ட் ஆகியுள்ளன.

துருக்கி அதிபர் எர்டோகன் பிரான்ஸ் அதிபர் “மனநலம் குன்றியவர்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துருக்கிக்கான பிரான்ஸ் தூதரரை அந்த நாடு திரும்ப பெற்றுள்ளது.

பிரான்ஸ் பள்ளி ஆசிரியர் சாமுவேல் பேட்டி, கருத்து சுதந்திரம் குறித்து பாடம் எடுத்தபோது, இஸ்லாமியர்கள் தங்கள் இறுதி தூதராக கருதும் முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தை மாணவர்களிடம் காட்டியுள்ளார். முகம்மது நபியின் உருவத்தை சித்தரிப்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி தவறான செயலாகும்.

‘நான் சாமுவேல்’ – கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள்

அந்த கேலிச்சித்திரம் 2015-ம் ஆண்டு, சார்லி ஹப்தோ என்ற பிரெஞ்ச் இதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து அந்த பத்திரிகை அலுவலகத்தின் மீது ஆயுதம் தாங்கிய இரண்டுபேர் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி, பள்ளி குழந்தைகளுக்கு மும்மது நபியின் படத்தை காண்பித்த ஆசிரியர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார். இந்த படுகொலையை செய்த செசன்யாவை சேர்ந்த 18 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த கேலிச்சித்திரம் கடந்த வெள்ளியன்று, பிரான்ஸ் அரசு அலுவலக கட்டிடங்களில் மீது ஒளிரச் செய்யப்பட்டது. அதற்கு முன்னர், இஸ்லாம் மதம் உலக அளவில் நெருக்கடியில் இருப்பதாக அதிபர் மெக்ரான் கருத்து தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, பிரிட்டன் தொடங்கி, வடக்கு ஆப்பிக்கா மற்றும் அரபு நாடுகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிப்போம், இஸ்லாம் மற்றும் அரபு மொழியிலும் ஹாஷ் டாக்குகள் உலக அளவில் தொடர்ந்த ட்ரெண்ட்ங்கில் உள்ளன.

இஸ்லாமிய நாடுகளில் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாட் சாரீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் “வெறுப்பு கலாச்சாரத்திற்கு இஸ்லாமியர்களே முதன்மை இலக்காகி வருகின்றனர். இது காலானியவாதிகளால் உருவாக்கப்பட்ட அவர்களுடைய முகவர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டது” என்ற குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து மெக்ரானின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஃபேஸ் புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் “இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியில் மெக்ரானுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, மெக்ரானின் உருவபொம்மை எரிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல், லிபியா, பாலஸ்தீனம், லெபனான், ஈராக், ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்