Aran Sei

பிரான்ஸ் தேவாலயத்தில் மூவர் கொலை : மீண்டும் பதற்றம்

பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாநகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்ர டேம் பேசிலிக்கா எனும் தேவாலயத்தில் நுழைந்து கத்தியால் மூன்று பேரைக் கொலை செய்து பலரையும் காயப்படுத்தியுள்ளதாக அல் ஜசீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

கடந்த அக்டோபர் 17-ம் தேதி பிரான்ஸ் பள்ளி ஆசிரியர் சாமுவேல் பேட்டி, கருத்துச் சுதந்திரம் குறித்துப் பாடம் எடுத்தபோது, இஸ்லாமியர்கள் தங்கள் இறுதித் தூதராகக் கருதும் முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தை மாணவர்களிடம் காட்டியுள்ளார். அந்தக் கேலிச்சித்திரம் 2015-ம் ஆண்டு, சார்லி ஹப்தோ என்ற பிரெஞ்ச் இதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மீது ஆயுதம் தாங்கிய இரண்டு பேர் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

முகமது நபியின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்குக் காட்டிய பிரெஞ்சு ஆசிரியர் தனது பள்ளிக்கு வெளியே தலை துண்டிக்கப்பட்டு மரணமடைந்தார். சமூக வலைத்தள அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து அப்துல்லாக் அன்சோரோவ் என்ற 18 வயதான இளைஞர் சாமுவேல் பணி புரிந்த பள்ளிக்கு வெளியே சாமுவேலை 30 செமீ நீளமான கசாப்புக் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய அப்துல்லாக் அன்சோரோவைக் காவலர்கள் சுற்றி வளைத்தபோது அவர் காவலர்களைத் தாக்க முயற்சித்துள்ளார். ஆகையால், அவரைக் காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

முன்னணி அரசியல்வாதிகள், சமூக உரிமை அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பாரிஸில் உள்ள ‘குடியரசுச் சதுக்கத்தில்’ அணிவகுத்து, “நான் சாமுவேல்” என்று பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தினர்.

இந்தக் கொலை “ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலின் அடையாளங்களைக் கொண்டுள்ளது” என்று இம்மானுவேல் மக்ரோன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கூறியுள்ளார்.

ஸ்லாம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தைக் கூறிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக டிவிட்டரில், மேக்ரான் ஒரு பிசாசு “MacronTheDevil” “ShameOnYouMacron”, “Boycott_French_Products” ஆகிய ஹாஷ் டேக்குகள் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளன.

அந்தக் கேலிச்சித்திரம் 2015-ம் ஆண்டு, சார்லி ஹப்தோ என்ற பிரெஞ்ச் இதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மீது ஆயுதம் தாங்கிய இரண்டுபேர் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்தக் கேலிச்சித்திரம் கடந்த வெள்ளியன்று, பிரான்ஸ் அரசு அலுவலகக் கட்டிடங்களின் மீது ஒளிரச் செய்யப்பட்டது. அதற்கு முன்னர், இஸ்லாம் மதம் உலக அளவில் நெருக்கடியில் இருப்பதாக அதிபர் மெக்ரான் கருத்து தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, பிரிட்டன் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாட் சாரீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் “வெறுப்புக் கலாச்சாரத்திற்கு இஸ்லாமியர்களே முதன்மை இலக்காகி வருகின்றனர். இது காலானியவாதிகளால் உருவாக்கப்பட்ட அவர்களுடைய முகவர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாநகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்ர டேம் பேசிலிக்கா எனும் தேவாலயத்தில் நுழைந்து கத்தியால் மூன்று பேரைக் கொலை செய்து பலரையும் காயப்படுத்தியுள்ளதாக அல் ஜசீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

இது ஒரு தீவிரவாத தாக்குதல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரான்சின் மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி. இரண்டு பெண்களும் ஒரு ஆணும் மரணமடைந்திருக்கின்றனர். ஒரு பெண் தாக்கப்பட்டு அருகில் இருக்கும் பாருக்கு தப்பிச் சென்றிருக்கிறார். ஆனால், அவர் தனக்கு ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் பிரான்சில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஆசிரியர் போலவே கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார் மேயர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்