உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வருகின்றன.
எண்ணெய் உற்பத்தியில் உலகின் மூன்றாவது இடத்திலும், ஏற்றுமதி இரண்டாவது இடத்திலும் ரஷ்யா இருந்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டாலரை கடந்துள்ளது.
2014 ஆம் ஆண்டிற்கு பிறகு, 100 டாலருக்கும் அதிகமான முறையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை.
போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய பங்கு சந்தை விழச்சி அடைய தொடங்கியுள்ளது. ஐரோப்பிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ஸ்டோக்ஸ் 600 விலை 3 விழுக்காடு வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பங்கு சந்தை வீழ்ச்சியடைந்திருக்கும் அதே வேளையில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகம் பெற்றிருக்கின்றன.
பிரிட்டனின் மிகப்பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான பே சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.13 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போன்று ஜெர்மனியின் ரெய்ன்மெட்டல் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தேல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தலா 3.2 விழுக்காடுகள் மற்றும் 2.04 விழுக்காடுகள் அதிகரித்திருக்கின்றன.
Source : Redfish Media
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.