Aran Sei

நேபாளம் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பித்தது உச்சநீதிமன்றம்

Image credit : indiatoday.in

ரண்டு மாதங்களுக்கு முன்பு, பிரதமர் கே.பி ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில், நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார். புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற வேண்டும் என்று பித்யா தேவி பண்டாரி அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 12 ரிட் மனுக்கள் மீது விசாரணை நடத்திய நேபாள உச்சநீதிமன்றத்தின் ஒரு சிறப்பு அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு, நேற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ரத்து செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தை 13 நாட்களுக்குள் மீண்டும் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

தலைமை நீதிபதி சோழேந்திர ஷூம்ஷர் ஜேபிஆர் தலைமையிலான இந்த அமர்வு, இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியானது என்றாலும், நேபாளத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்றம் இதில் தலையிட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு, அரசியல் முடிவுகள் அரசியல் சட்டம் விதிக்கும் வரம்புகளுக்குள்தான் எடுக்கப்பட வேண்டும் என்பதை காட்டுவதாக தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது.

கே.பி. ஷர்மா ஒலிக்கும் அவரது நேபாள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான வேறுபாட்டைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி பரிந்துரைத்திருந்தார். பிரதமராக இருந்த ஷர்மா ஒலி மீது கட்சியின் நிலைக் குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

பிரதமர் ஒலி கட்சியிலிருந்து நீக்கம் – நேபாளத்தில் அரசியல் சட்ட நெருக்கடி

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்த ரிட் மனுக்களில் ஒன்று பிரதமர் ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கொறடா தேவ் பிரசாத் குருங்-ஆல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கட்சிக்குள் ஷர்மா ஒலிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணை தலைவர் புஷ்ப குமார் தகால் “பிரச்சந்தா”, இப்போதைய நிலைமையில் பிரதமர் ஒலியுடன் எந்த உடன்பாட்டுக்கும் வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து போராடி வந்த முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறியுள்ளார்.

நேபாளம் சென்றுள்ள சீனக் குழு – ‘ கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவை தவிர்க்க முயற்சி’

“உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவு நேபாள மக்களின் வெற்றி. இது நேபாளத்தின் ஜனநாயகத்தை பாதுகாக்கும்” என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்குப் பிறகு பிரதமர் பதவியில் தொடர்வதற்கு ஷர்மா ஒலிக்கு தார்மீக உரிமை இல்லை என்று நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேகர் கொய்ராலா கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்