Aran Sei

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ: சாம்பலாகிய 40 லட்ச ஏக்கர் நிலங்கள்

கலிஃபோர்னியா காட்டுத்தீயால் 40 லட்ச ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ள நிலையில், தீயில் சிக்கி இதுவரையில் 31 பேர் பலியாகி உள்ளனர்.

கண்ணாடி நெருப்பு என்று சொல்லப்படும் காட்டுத் தீ, நாபா மற்றும் சோனோமா பகுதிகளில், 230 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து அழித்துள்ளது.

கனாடிகட் பகுதியிலும் தீ வேகமாக பரவி வருகிறது. சான்ஃப்ரான்சிஸ்கோ வடக்கு பகுதியில் தீ பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாபா மற்றும் சொனோமா கவுண்டிகளில் வீசும் பலத்த காற்றினால் 28,000 வீடுகளும் பிற கட்டிடங்களும் அச்சுறுத்தலில் உள்ளன.

சான்ஃப்ரான்சிஸ்கோ பகுதி வெப்பம் அதிகரித்து அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. காட்டுத் தீ பரவலால் இதுவரை 80,000 மக்கள் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.

காட்டுத் தீயைக் கட்டுபடுத்துவதில் ஈடுபட்டு வரும் வீரர்கள் நாபா பள்ளத்தாக்கு வழியே செல்லும்போது தீயணைப்பு வாகனத்துக்குள் இருந்து பதிவு செய்த காணொலியை பகிந்துள்ளார்கள்.

தீயணப்பு படை அதிகாரிகள் பொதுமக்களை விழிப்புணர்வோடு செயல்படவும் வெளியேற்றப்பட்ட பகுதியில் இருந்து விலகியிருக்கவும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

அமெரிக்க காட்டுத் தீ நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு எரிக்கப்படுவதால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தின் விளைவு என பல ஆய்வுகளில் குறிப்பிடுள்ளார்கள்.

credits:hindutamil.in

பருவநிலை மாற்றம் கலிஃபோர்னையாவை வறண்ட நிலமாக மாற்றியதில், அங்குள்ள மரம், செடிகள் எளிதில் தீ பற்றிக்கொள்ளும் வகையில் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

காட்டுத்தீ குறித்து அமெரிக்க செனட் சபை உறுப்பினர் எலிசபத் வாரன் தனது  ட்விட்டர் பக்கத்தில் “பருவநிலை மாற்றம் இனி எதிர்காலத்தில் வரப்போகும் அச்சுறுத்தல் இல்லை. இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பயங்கர காட்டுத் தீ மற்றும் புயலுக்கு அது வழிவகுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நாம் உடனடியாக செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்