Aran Sei

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

credits : indian express

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் விவசாயிகளின் போராட்டம் “இந்தியாவுக்கும் அதன் நீண்டகால எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை” என்று கூறிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

‘பால் தேனீர் கூட்டணி’ – ஜனநாயகம் கோரி ஒன்றிணையும் மூன்று நாட்டு போராளிகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 14 நாட்களுக்கு மேலாக தில்லியில்  போராட்டம் நடைபெற்று வருகிறது. கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் வசித்து வரும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் விவசாயிகளின்  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

credits : indian express
credits : indian express
credits : outlook
credits : outlook

இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தன்மஞ்சீத் சிங் தேசி, வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக அமைதியாக போராடி வரும் விவசாயிகளை நீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை குண்டு மற்றும் காவல்துறையைக் கொண்டு இந்திய அரசு ஒடுக்கி வருகிறது என்றும் பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்த விவசாயிகளின் போராட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பினார்.

மல்லையாவை ஒப்படைக்க முயற்சி – ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்

மேலும் ”இங்கிலாந்து பிரதமர் இந்தியப் பிரதமரிடம் நமது இதயப்பூர்வமான வருத்தத்தையும், தற்போது இந்தியாவில் நடக்கும் போராட்டத்திற்கு விரைவாகத்  தீர்வு காண கோரிக்கையை வைப்பாரா, அமைதியான போராட்டத்திற்கு அனைவருக்கும் அடிப்படை உரிமை உண்டு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறாரா?” என்று நாடாளுமன்றத்தில் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கு தீவிர கவலைகள் உள்ளன. ஆனால், இவை இரு அரசாங்கங்களுக்கிடையில் தீர்க்கப்பட வேண்டிய விஷயம்” என பதிலளித்துள்ளார்.

‘அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளை வீட்டில் விட்டு, போராட்டத்திற்கு வாருங்கள்’ – விவசாயிகள்

இந்தியாவின் உள்நாட்டு விவசாய பிரச்சனைக்கு இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

போரிஸ் ஜான்சனிடம் இந்திய விவசாயிகள் போராட்டத்தைக் குறித்து கேள்யெழுப்பிய தன்மஞ்சித் சிங் அவர் அளித்த பதிலுக்கு எதிர்வினையாக ”ஆயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுவது குரலெழுப்பிக் கொண்டிருக்கும், உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையில் போரிஸ் ஜான்சன் உளறி இருப்பது நம் தேசத்திற்கே அவமானம்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு தொடர்பில்லாத பதிலை இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனைக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது போரிஸ் ஜான்சனுக்கு அவமானம்” என பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அஃப்சல் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சாரா சுல்தானா ”காஷ்மீருக்கும் பஞ்சாபிற்கும் வித்தியாசம் தெரியாத நபரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க கூடாது” என பகடி செய்யும் தொனியில் ட்விட் செய்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமரிடம் ”கேள்வியைச் சரியாக கேட்கவில்லை” என இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் பதிலளித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்