Aran Sei

ஆஸ்திரேலியாவில் வலதுசாரி இந்து அமைப்புகளின் வன்முறைக்கு இடமில்லை – நியூசவுத் வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர்

Image Credit : nationalherald.com

ஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சட்டப் பேரவை உறுப்பினர் டேவிட் ஷூபிரிட்ஜ் தீவிரவாத, வலதுசாரி இந்து தேசியவாதிகளின் வன்முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிப்ரவரி 28-ம் தேதி, நான்கு சீக்கிய இளைஞர்கள் புதிய கார் வாங்கியதைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, தீவிரவாத கும்பல் ஒன்று அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளது, அவர்களது காரை அடித்து நொறுக்கியுள்ளது என்றும், தாக்குதலுக்குக் காரணமாக காரில் இருந்தவர்கள் சீக்கியர்கள் என்று அந்த கும்பல் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்

கார் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ்-பாஜக ஏற்பாடு செய்த கார் பேரணியில் பங்கேற்றவர் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது

நியூ சவுத் வேல்சில் வாழும் இந்திய சமுதாயங்களில், தீவிரவாத, வலதுசாரி இந்து தேசியவாத கும்பல்களைத் தவிர வேறு எந்தப் பிரிவினரும் இது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுவதில்லை என்று டேவிட் ஷூபிரிட்ஜ் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் சிஐஏவினால் ராணுவவாத தீவிர மத அமைப்பாக கருதப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத், நியூ சவுத் வேல்சின் அரசுப் பள்ளிகளில் செயல்படுவது பற்றியும் அவர் விளையாட்டு, பல்கலாச்சாரவாதம், மூத்த குடிமக்கள், முன்னாள் இராணுவத்தினர் துறைக்கான அமைச்சரான மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஃப் லீயுடன் மார்ச் 5-ல் நடந்த சந்திப்பில்  கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“சமூகத்தில் நல்லிணக்கத்தை ஆதரிப்பதற்கு, சில நேரங்களில் இது போன்ற தீவிரவாத சக்திகளின் அடையாளத்தை வெளிப்படுத்தி அவர்களை சமூகத்தின் முன் அவமானப்படுத்துவது அவசியமாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

“வன்முறை தெரிந்த அமைப்பினால் செய்யப்படும் போது பொதுவான அறிக்கைகள் சிறந்த எதிர்வினையாக இருக்காது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 28 அன்று டேவிட் ஷூபிரிட்ஜ், இந்திய தூதரகத்துக்கு வெளியில் நடத்தப்பட்ட ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில், அதி-வலதுசாரி ஹிந்து தீவிரவாதத்தால் நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு பற்றி பேசியிருந்தார்.

“மேலும் மேலும் அதிக வலதுசாரியாகவும், சகிப்புத்தன்மையின்றியும் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக போராடும் இந்திய விவசாயிகளுக்கும் பிற போராடும் இந்திய மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறோம்.அது மட்டுமின்றி சிட்னியில் உள்ள இந்தியர்களுக்கு ஆதரவாகவும் நாம் நிற்கிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.

“சீக்கிய கோயில் ஒன்று வலதுசாரி ஹிந்து தீவிரவாதிகளால் தாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இது போன்ற தாக்குதல்கள் நிற்க வேண்டும். வெற்றிகரமான, செயல்துடிப்பான பன்முக கலாச்சார சமூகமான ஆஸ்திரேலியாவில் இதற்கு இடமில்லை” என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்