Aran Sei

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி விலக வலியுறுத்தல்

ஹிட்லர் சித்தாந்தத்துடன் ஒத்த கருத்துடைய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகத் தலைவரைச் சந்தித்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேனட் ரைஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 15-ம் தேதி (2020) இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் பேரி ஓ ஃபாரல் ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பாகவத்தை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”ஆர்எஸ்எஸ் இயக்கம் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மக்களுக்காக சேவை செய்து வருகிறது. நான் சர்சங்சலக் டாக்டர் மோகன் பகவத்தைச் சந்தித்தேன், அவர் இந்தச் சவாலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து என்னுடன் பகிர்ந்துகொண்டார்” என பேரி ஓ ஃபாரல் பதிவிட்டுள்ளார்.

மனித உரிமை தொடர்பாக இரண்டு வட்ட மேசை மாநாடுகளில் கலந்துகொண்டவரான விக்டோரியா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஜேனட் ரைஸ் “ஆர்எஸ்எஸ் மனித உரிமைக்குச் சவால் விடும் பாசிச அமைப்பு” என ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசும் போது கருத்து தெரிவித்துள்ளார்.

”நாஜிப் படைகள் மூலம் யூதர்களை இனப்படுகொலை செய்த ஹிட்லரை தங்கள் ஆதர்சமாகக் கொண்டுள்ள அமைப்பு, ஆர்எஸ்எஸ். இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகவும், தனி மனிதரின் மத உரிமைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்து அமைப்பாகவும் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ன் யுபிஎஸ்சி ‘யாகம்’ – சீ.நவநீத கண்ணன்

”இந்து ராஷ்ட்ரத்தைக் கட்டியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியர்களை அன்னியப்படுத்தி அவர்களை மனிதர்களுக்கு எதிரானவர்கள் போல் சித்திரிக்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்ததை அவமானமாகக் கருதுகிறேன், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என விக்டோரியா செனட்டர் ஜேனட் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் ”உலக அரங்கில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் பேரி ஓ பேரல் மனித உரிமைக்கு எதிராகச் செயல்படும் பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர்களைச் சந்தித்தது ஆஸ்திரேலியாவின் மதிப்பீடுகளுக்கு எதிரானது” எனப் பதிவிட்டுள்ளார்.

”மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த அமைப்பான ஆர்எஸ்எஸ் இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு, மத்தியப் புலனாய்வு அமைப்பு ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்றவை மதவெறி கொண்ட போராளிக் குழுக்கள் எனத் தெரிவித்துள்ளது” எனக் கூறி அவர் பேரி ஓ ஃபாரல் பதவி விலகக் கோரி கையெழுத்து இயக்கம் ஒன்று change.org-ல் தொடங்கப்பட்டுள்ளது.

#barrymustresign எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகி வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்