அமெரிக்காவின் அட்லான்டா மாநகர பகுதியில் நடந்த 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 21 வயதான ராபர்ட் ஆரோன் லாங் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது.
சிக்காகோ – 4 மணி நேரமாக தொடர்ந்த துப்பாக்கி தாக்குதல்களில் 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்
இந்த துப்பாக்கிச் சூடுகள் நேற்று மதியம் அடுத்தடுத்து நடந்துள்ளன. அட்லான்டா நகரத்திலிருந்து வடமேற்கில் சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள, ஜார்ஜியா மாநிலத்தின் செரோக்கி கவுன்டியில் ஆக்வொர்த் அருகில் உள்ள “யங்ஸ் ஆசியன் மசாஜ்” பார்லரில் நடந்த முதல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மாலை 5.47 மணிக்கு, நகரத்தின் வடகிழக்கில் உள்ள “கோல்ட் ஸ்பா”-வில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டது பற்றிய தகவல் போலீசுக்கு வந்துள்ளது. மேலும், அந்தத் தெருவின் மறுபுறத்தில் “அரோமாதெரபி ஸ்பா”வில் இன்னொரு பெண்ணின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 7 பேர் பெண்கள், ஆறு பேர் ஆசியர்கள் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஒரு ஆண் காயமடைந்துள்ளார். தாக்குதல்களுக்கான நோக்கம் பற்றி ஜார்ஜியா போலீஸ் எதுவும் தெரிவிக்கவில்லை.
“Stop AAPI Hate” என்ற வெறுப்புக்கு எதிரான குழு, இந்தத் தாக்குதல்கள் குறித்து ட்வீட் செய்துள்ளது. “இவை வெறுப்பினால் தூண்டப்பட்டவையா, வெறுப்புடன் தொடர்புடையவையா என்பது உள்ளிட்ட பல விபரங்கள் வெளியிடப்படவில்லை” என்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது.
Few details have been released, including whether or not the shootings were related or motivated by hate. But right now there is a great deal of fear and pain in the Asian American community that must be addressed.
— Stop AAPI Hate (@StopAAPIHate) March 17, 2021
மேலும், “ஆசிய அமெரிக்க சமுதாயத்தினர் மத்தியில் பெருமளவு பயமும் வேதனையும் பரவியுள்ளது” என்றும் அது கூறியுள்ளது.
ராபர்ட் ஆரோன் லாங்-ன் பேஸ்புக் பக்கமும், அவர் உள்ளூர் சர்ச்சில் இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது என்று தி கார்டியன் கூறுகிறது.
துப்பாக்கிச் சூடுகள் நடந்த இடங்களுக்கு அருகில் உள்ள நிறுவனங்களை விசாரிக்கும்படியும், அந்தப் பகுதியில் ரோந்துகளை அதிகரிக்கவும் போலீஸ் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக அட்லான்டா போலீஸ் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.