ஹெச் 1 பி விசா வழங்கும் நடைமுறையில் ட்ரம்ப் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிய, ஹெச் 1 பி விசா பெற்றிருக்க வேண்டும். இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த விசாவைப் பெற்று, அமெரிக்காவின் தகவல் தொழிற்நுட்பத்துறை உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பல நாடுகளிலும் பொருளாதாரம் வீழ்ச்ச்சியடைந்தது என்று அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறி வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்கா வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஹெச் 1 பி விசா வழங்குவதை இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து ஹெச் – 1 பி விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து அமெரிக்க அரசு சமீபத்தில் சட்டம் இயற்றியது. இதில், விசாக் கட்டணம் உயர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
ஈராக், ஆப்கானிஸ்தான் – அமெரிக்க படைகளை திரும்பப் பெறுகிறார் ட்ரம்ப்
இதை எதிர்த்து யு.எஸ்.சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ், பே ஏரியா கவுன்சில், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட சிறந்த சிலிக்கான் வேலி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன என தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கு
கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெஃப்ரி வைட் முன் விசாரணைக்கு வந்துள்ளது என தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் அதிகளவிலான அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இதைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின் மூலம் விசா விண்ணப்பத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினரே விசா பெறுவதற்குத் தகுதியுடையவர் உள்நாட்டுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
‘ட்ரம்ப், ஆபத்தான செய்தியை உலகிற்குச் சொல்கிறார்’ – ஜோ பைடன் கண்டனம்
இதை மறுத்த நீதிபதி ஜெஃப்ரி வைட், இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், ஹெச் 1 பி விசா விதி மாற்றங்கள் தொற்றுநோயால் ஏற்பட்ட வேலை இழப்புகளுக்குச் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இல்லை, ட்ரம்ப்பின் அரசாங்கத்தால் நீண்ட காலமாகப் பரிசீலனையில் இருந்த திட்டம் எனக் கூறியுள்ளார்.
‘ட்ரம்ப், ஆபத்தான செய்தியை உலகிற்குச் சொல்கிறார்’ – ஜோ பைடன் கண்டனம்
இது அமெரிக்காவை நம்பி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கும் எனக் கூறி ஹெச் 1 பி விசா வழங்குவதில் மாற்றியமைக்கப்பட்ட விதிகளை ரத்து செயவதாக உத்தரவிட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் 85,000 ஹெச் 1 பி விசாக்களை அமெரிக்கா வெளியிடுகிறது. வழக்கமாக, கிட்டத்தட்ட 600,000 எச் -1 பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.