Aran Sei

சர்வதேச கலப்பு தற்காப்புக் கலை போட்டி: ஹிமாச்சல் பெண்கள் தேர்வு

இமாச்சல பிரதேசதின், சம்பா மாவட்டத்தை சேந்த பிரியங்காவும் (18), நூற்புற் மாவட்டத்தை சேர்ந்த சோமி தேவியும் குமிட் 1 லீக், சர்வதேச கலப்பு தற்காப்பு கலை போட்டியில் (எம்.எம்.ஏ) கலந்துகொள்ள தேர்வாகியுள்ளார்கள்.

தேசிய எம்.எம்.ஏ போட்டியில் நிகழ்த்திய சாதனையின் அடிப்படையில் இவர்களுக்கு இந்த நுழைவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மல்யுத்த போட்டி வடிவத்திலான, இந்த பெண்களின் சர்வதேச எம்.எம்.ஏ போட்டியை, செப்டம்பர் 29 அன்று மும்பையில் அறிமுகபடுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குமிட் 1 லீக் இந்தியாவில் முதல் முறையாக டோயம் நிறுவனத்தால் தொடங்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக்கேல் டைசன் குமிட் 1-னின் விளம்பர தூதரக இருப்பார். இந்த தொடர் போட்டியில் இந்தியா, ஈரான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இளம் பெண் எம்.எம்.ஏ போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் இளம் பெண் எம்.எம்.ஏ போட்டியாளரான பிரியங்கா இதுவரை நான்கு தேசிய எம்.எம்.ஏ போட்டிகளை வென்றிருக்கிறார். இதுவரை மூன்று போட்டிகளை வென்றுள்ள சோமி தேவி, கடந்த ஆண்டு நடந்த உலக எம்.எம்.ஏ நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இந்த பெண்களின் பயிற்சியாளரான அமித் ராணா “எம்.எம்.ஏ என்பது மல்யுத்தம், ஜூடோ மற்றும் குத்து சண்டை ஆகியவற்றின் கலவை” என்று ட்ரிப்யூன் இந்தியாவுக்கு கூறியுள்ளார். “இதற்கு முன் இருவரும் எம்.எம்.ஏ தேசிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இமாச்சலுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்