Aran Sei

உலக மகிழ்ச்சி குறியீடு: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 136வது இடத்தில் இந்தியா

லக மகிழ்ச்சி குறியீட்டில், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 136வது இடத்தை இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு 139வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு சற்று முன்னேறி 136வது இடத்தை பிடித்துள்ளது.

  1. தெற்கு ஆசிய நாடுகளில் தாலிபன் ஆட்சியில் இருந்து ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளது. 146 நாடுகள் கொண்ட பட்டியலில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.  நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் முறையே 84,94,121,127 ஆகிய இடங்களை பிடித்துள்ளனLaunch Popup.

இந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பு வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சமூக நிலை, தனிநபர் சுதந்திரம் , ஊழல்களின் அளவு ஆகிய காரணிகளை கொண்டு மகிழ்ச்சியின் அளவு கணக்கிடப்படுகிறது.

10வது முறையாக இந்த பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், தொடர்ந்து 5வது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 

பின்லாந்தைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் அடுத்ததடுத்த இடங்களை பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளை பொருத்த வரை அமெரிக்கா 16 இடத்திலும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் முறை 17 மற்றும் 20வது இடத்திலும் உள்ளன.

Source: The Indian Express  

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்