Aran Sei

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 139வது இடம் – ஐ.நா சபை தகவல்

.நாவின் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 139வது பிடித்திருக்கிறது. 149 நாடுகளில் ”குடிமக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்ற அந்தப் பட்டியலில் தொடர்ந்து நான்காண்டுகளாக பின்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது.

ஐ.நா.வின் ஒரு பிரிவு வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில், கொரோனா பெருந்தொற்றில் உலகம் முழுவதும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து கவனம் செலுத்துகிறது.

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: கண்டுகொள்ளாத பல்கலைக்கழகம் -மாணவர்கள் போராட்டம்

“நாங்கள் இரண்டு விசயங்களை நோக்கமாக கொண்டு செயல்பட்டோம். முதலாவது கொரோனா விளைவுகளால் மக்கள் வாழ்க்கை கட்டமைப்பு மற்றும் தரம்மீது ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவனம் செலுத்துவது. இரண்டாவது உலகம் முழுவதும் அரசாங்கங்கள் தொற்றை எப்படி கையாண்டது என்பதை  மதிப்பீடு செய்வது.  குறிப்பாக, சில நாடுகள் ஏன் மற்றவர்களைவிட சிறப்பாக செயல்பட்டார்கள் என விளக்க முயற்சிக்கிறோம்” என் அந்த அமைப்பின் மற்றொரு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 2019 ஆம் 140 வது இடத்தில் இருந்த இந்தியா 2020 ஆம் ஆண்டில் 139 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கர் மகத் குள போராட்ட உரை

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் நார்வே ஆகிய நாடுகளைத் உள்ளது.

இந்தியாவின் அண்டை  நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் , சீனா ஆகிய நாடுகள் முறையே 105, 101, 84 ஆகிய இடங்களில் உள்ளன.

‘வீழ்ச்சியின் விளிம்பில் விவசாய சமூகம்’: விலை உயர்வுக்கு எதிராக பாகிஸ்தான் விவசாயிகள் டிராக்டர் பேரணி

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர், அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே (148), ருவாண்டா (147), போட்ஸ்வானா (146) மற்றும் லெசோத்தோ (145) ஆகியவை உள்ளன.

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், மகிழ்ச்சியான நாடுகள் பட்டியைலில்  அமெரிக்கா 19 வது இடத்தில் உள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்