Aran Sei

இந்தியாவில் கட்டப்படவுள்ள உலகின் மிகப்பெரிய அணுமின்நிலையம்- பிரான்ஸ் நிறுவனம் அறிவிப்பு

காராஷ்டிரா மாநிலம் ஜைதாபூரில், உலகிலேயே மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தைக் கட்ட உதவவுள்ளதாகப் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சேர்ந்த எரிசக்தி நிறுவனமான ஈ.டி.எப்  தெரிவித்துள்ளது.

இந்த அணு மின் நிலையத் திட்டம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பிற்கு பின்னர் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படபடாமல் இருந்தது.

ஜப்பான் அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென் கொரியா

இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஜைதாபூரில் இதற்கான பொறியியல் நுட்பங்களையும், உபகரணங்களையும் வழங்கி  இபிஆர் அணுஉலைகளை உருவாக்க உதவவுள்ளதாக ஈ.டி.எஃப் நிறுவனம் முன்வந்திருக்கிறது.

மேலும், இந்தத் திட்டம் நிறைவடைந்தால் 10 கிகாவாட்ஸ் (GW) மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும், இதை 70 மில்லியன் வீடுகளுக்கு வழங்க முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடலில் கொட்டப்படும் புக்குஷிமா அணுக்கழிவு நீர் – தமிழகத்தில் செயல்படும் அணுமின் நிலையங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா?

இதற்கான முழுக் கட்டுமானம் முடிவடைய 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்றாலும் முழுமையாகக் கட்டப்படும் முன்னரே மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் வரும் மாதங்களில் கையெழுத்தாகும் என்று ஈடிஎஃப் நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும், இந்த அணுவுலை கட்டப்படும்போது அப்பகுதி மக்கள் 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும்,2700 பேருக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு

இதே போல அணு மின்சார உற்பத்திக்கான தொழில்நுட்பம் பரிமாற்றப்படுவது குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது 22 அணுவுலைகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் நீர் அழுத்த அணுஉலைகள் ஆகும். நாட்டின் மின்சாரத் தேவையில் 3% இவை பூர்த்தி செய்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

source; Ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்