Aran Sei

தடுப்பூசி காப்புரிமை தள்ளுபடிக்கு உலக வங்கி எதிர்ப்பு – புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உலக வங்கி தலைவர் கருத்து

கொரோனா தடுப்பூசிகளின் காப்புரிமை  தள்ளுபடி முடிவை உலக வங்கி ஆதரிக்கவில்லை என்றும்,  இது மருத்துவ துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறினார்.

உலக வங்கியின் பொருளாதார முன்னெடுப்புகள் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இதனை அவர்  தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

தடுப்பூசி அணுகலை பரவலாக்கும் வகையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளால் முன்மொழியப்பட்டு, உலக வர்த்தக நிறுவனத்தில் நடைபெற்று வரும் காப்புரிமை தள்ளுபடிக்கான பேச்சுவார்த்தயை ஆதரிக்கிறீர்களா என கேட்டதற்கு, “நாங்கள் அதை ஆதரிக்கவில்லை, இது மருத்துவ துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்” என அவர் கூறினார்.

உலக வர்த்தக நிறுவனத்தின் முடிவை உலகின் முக்கிய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றன.

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிக்கக் கூடாது – போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

”தடுப்பூசிகளின் காப்புரிமை தள்ளுபடியின் மூலம் தடுப்பூசி வழங்கல் திறம்பட அதிகரிக்காது மாறாக, புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு, பற்றாக்குறை அதிகரித்து, உற்பத்தி திறனையும் பாதிக்கும்” அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், வளர்ந்த நாடுகள் தங்களிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான தடுப்பூசியை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என டேவிட் மால்பாஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

கொரோனா தடுப்பு மருந்துமீதான காப்புரிமைக்கு விலக்கு- அமெரிக்காவை தொடர்ந்து ஜரோப்பிய ஓன்றியம் ஆதரவு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளால் முன்மொழியப்பட்டு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரீன் டாய் ஆதரித்துள்ள தடுப்பூசி தள்ளுபடி குறித்து பேச்சுவார்த்தைகள் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்று வருகிறது.

”பேச்சுவார்த்தை இன்னும் இருக்கிறது. அவர்கள் யாரும் தங்கள் அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை” என ஜெனிவாவை சேர்ந்த வர்த்தக அதிகாரி தெரிவித்தார்.

Source : Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்