Aran Sei

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பணியிடத்திலேயே கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பு

ரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணியிடங்களிலேயே கொரோனா தடுப்பூசி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

“உள்நாட்டு பயன்பாட்டைவிட அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி”: ஐநாவில் இந்தியா தகவல்

இதுகுறித்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் சுற்றறிக்கையில், வரும் ஏப்ரல் 11 முதல் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களிலேயே கொரோனா தடுப்பூசி வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கூறியுள்ளது.

’மேலும் இரு கொரோனா தடுப்பூசி; தற்சார்பு சுகாதாரத்திற்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி நிதி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மேலும், 45 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பூசி பெற தகுதியுடைய பணியாளர்களுக்கும் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் எனவும், பணியாளரின் குடும்ப உறுப்பினர்களுக்குச் செலுத்தப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவில் மாவட்ட நீதிபதியின் தலைமையிலும், நகர அளவில் நகராட்சி ஆணையரின் தலைமையிலும் பணியிடங்களிலேயே கொரோனா தடுப்பூசி மையம் அமைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுப்பு

மேற்கொண்டு கொரோனா தொற்று ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்