Aran Sei

சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் சொத்துக்கள் முடக்கம் – நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

சிவ சேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 1034 கோடி ரூபாய் மதிப்பிலான பத்ரா சால் நில ஊழல் வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராவத்திற்கு சொந்தமான அலிபாகில் உள்ள பிளாட் (நிலம்), மும்பை தாதரில் உள்ள வீடு ஆகியவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடக்கம்.

இது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களிடம் பேசிய ராவத், “என் சொத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள், என்னை சுடுங்கள் அல்லது சிறையில் அடையுங்கள். நான் பயப்படப் போவதில்லை காரணம் நான் பால் தாக்கரேவின் சீடன் மற்றும் சிவ சேனாவின் தொண்டன்” என தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் தரவரிசை – முதலிடத்தில் அம்பானி இரண்டாம் இடத்தில் அதானி

”நான் போராடுவேன், எல்லோரையும் அம்பலப்படுத்துவேன். அமைதியாக இருக்க மாட்டேன். அவர்கள் ஆடட்டும். ஆனால், உண்மையே வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மார்ச் 25 தேதி மகாராஷ்டிரா அரசாங்கத்தை இழிவுபடுத்தும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source: NDTV

ராமராஜ்ஜியம் குறித்துப் பேசுகிறார் மருத்துவர், அரசியல் செயற்பாட்டாளர் காந்தராஜ்

விரிவாக தெரிந்து கொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்