Aran Sei

நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு எதிர்ப்பார்த்ததை விட குறைவு – தலைமைத் தேர்தல் ஆணையர் கவலை

Image Credits: DNA India

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில், வாக்களிக்க வரும் பெண்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சன்சத் ரத்னா விருதுகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையில் 15 பெண்  உறுப்பினர்கள் இருந்ததாகவும், 17வது மக்களவையில் 78 பெண் உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். “முன்னேற்றம் இன்னும் மெதுவாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

உள்ளாட்சி அமைப்புகளில் அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று சுட்டிக்காட்டிய சுஷில் சந்திரா, உள்ளூரில் உருவான பல பெண் தலைவர்கள் தங்கள் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தி, அவர்களின் சமூகங்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்

சட்டமியற்றுபவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொரோனா தொற்றுநோய் நேரில் சந்திப்பதற்கு தடையாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேர்தலின் பொருட்டு தலைவர்கள் தங்களின் வீட்டு வாசலுக்கு வந்தார்கள் என்று வாக்காளர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்து அவர் கூறுகையில், சூடான வாதங்கள், விவாதங்கள் மற்றும் பேச்சுக்கள் ஒரு வலுவான பாராளுமன்றத்தின் அச்சாணி. அடிக்கடி இடையூறு செய்வது, வெளிநடப்புக்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் சரியானவை அல்ல என்று கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

”இடையூறுகள் காரணமாக நாடாளுமன்றம் பல மணி நேரத்தை இழந்துள்ளது. இது வலுவான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்று அவர் கூறினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, ​​வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 91.2 கோடியாக இருந்தது, இதுவரை இல்லாத அளவுக்கு 66.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. “இன்றைய நிலவரப்படி, 95.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 49.04 கோடி ஆண்கள் மற்றும் 46.09 கோடி பெண்கள்” என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராகூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்