Aran Sei

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகாரளித்த பெண்: பெகசஸ் மென்பொருள் வழியாக கண்காணிப்பு

credits : the scroll

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றம் சுமத்திய பெண்ணின் தொலைப்பேசி வேவுப் பார்க்கப்பட்டதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, உச்ச  நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக செயல்பட்ட ரஞ்சன் கோகாய்,  தனக்கு  பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக,  நீதிமன்ற  பெண் பணியாளர்  ஒருவர்  புகாரளித்திருந்தார்.  அந்தப் பெண் முன் வைத்த குற்றசாட்டுகளை  முற்றிலுமாக  மறுத்திருந்த  ரஞ்சன்  கோகாய்,  இந்தக் குற்றச்சாட்டு, நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்தும் சதி என தெரிவித்திருந்தார்.

ரஞ்சன் கோகாய்  மீது  வைக்கப்பட்ட  குற்றச்சாட்டு  தொடர்பாக  விசாரிக்க, நீதிபதி  எஸ்.ஏ.பாப்டே    தலைமையில், நீதிபதிகள்  இந்து மல்கோத்ரா  மற்றும் இந்திரா  பானர்ஜி  அடங்கிய  குழு  ஒன்று அமைக்கபட்டது.  விதிமுறைகளின்  அடிப்படையில்  மறைமுகமாக  விசாரணை  நடத்திய  இந்தக்  குழு,  ரஞ்சன்  கோகாய்  மீதான  குற்றச்சாட்டிற்கு  ஆதாரம் இல்லை  என்ற  முடிவுக்கு  வந்தது.

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க சட்டம் இயற்ற வேண்டும் – விஸ்வ இந்து பரிஷத் தீர்மானம்

இதைத் தொடர்ந்து,  ரஞ்சன்  கோகாய்  மீது  வைக்கப்பட்ட  குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள சதி திட்டம் குறித்து விசாரிப்பதற்காக  உச்சநீதிமன்றம் தானாக  முன்வந்து  வழக்குப் பதிவு  செய்தது.

பெகசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் – பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கண்டனம்

இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து விசாரிக்க, ஒய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு, இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால், வழக்கை தொடர்வதில் எந்தப் பலனும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற போராட்டத்திற்கு நிபந்தனை விதித்த காவல்துறை – கோரிக்கையை ஏற்க மறுத்த விவசாய சங்கத்தினர்

முன்னாள் தலைமை நீதிபதி கோகாய், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) தயாரிப்பது தொடர்பான, சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்ததால், அவருக்கெதிராக சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று, உளவுத்துறை இயக்குநர் அளித்த கடிதத்தைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இதை நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளது எனத் தெரிவித்தது.

பெகசஸ் ஸ்பைவேர் : ‘திருமுருகன் காந்தியின் தொலைபேசியை உளவு பார்ப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்’ – மே 17 இயக்கம்

இதையடுத்து,  சதித்  திட்டம்  குறித்து  விசாரிப்பதற்காக  தானாக  முன் வந்து பதிவு  செய்யப்பட்ட  வழக்கை,  சஞ்சய்  கிஷன்  கவுல்  தலைமையிலான அமர்வு, கடந்த 18-2-21 அன்று  முடித்து  வைத்ததாக  தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது பெகசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருள் வழியாக கண்காணிக்கப்பட்டோர் பட்டியலில், ரஞ்சன் கோகாய் மீது குற்றம் சுமத்தியிருந்த பெண்ணும் இடம் பெற்றிருப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘பெகசஸ் ஸ்பைவேரை தவறாக பயன்படுத்தியவர்களை குற்றவாளி கூண்டிலேற்ற வேண்டும்’ – வாட்ஸ் அப் வலியுறுத்தல்

இது தொடர்பாக வெளிவந்துள்ள செய்தியில், பாலியல் அத்துமீறல் புகாரை பெண் பணியாளர் கொடுத்த அந்த வாரமே, அந்தப் பெண்ணினுடைய தொலைபேசி,  பெண்ணினுடைய கணவர் அவருடைய உறவினர்கள் உட்பட 11 பேரினுடைய கைபேசிகள் கண்காணிக்கப்பட்டது தற்போது அம்பலமாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

‘வேவுப் பார்க்கும் பெகசஸ் ஸ்பைவேர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?’ – ஒன்றிய அரசுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பிய கேரள எம்.பி

உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் அளித்ததுதான், அந்த பெண்ணினுடைய பெயர், பெகசஸ் மென்பொருள் வழியாக கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இடம் பெற்றிருபதற்கான காரணம் என தி வயர் தெரிவித்துள்ளது.

‘வேவுப் பார்க்கும் பெகசஸ் ஸ்பைவேர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?’ – ஒன்றிய அரசுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பிய கேரள எம்.பி

பாபர் மசூதி வழக்கு உட்பட பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த ஒய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்