Aran Sei

அரசியல் ரீதியாக பெண்களை இழிவுபடுத்த கூடாது – உதயநிதிக்கு அறிவுரை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்

அரசியல் ரீதியாக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசி விடலாம் என்கிற எண்ணத்தை உதயநிதி ஸ்டாலின்  கைவிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியது, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக  பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் முகநூல் – வைகோ குற்றச்சாட்டு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு” என்று பேசியதோடு மிகவும் மோசமான வார்த்தைகளையும் பேசினார்.

விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?

உதயநிதியின் இந்த சர்ச்சை பேச்சைக் கேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் பலரும் சிரித்தனர். அந்த நிகழ்வில் உதயநிதி சர்ச்சைகுரிய வகையில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதால் அவருக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். பலரும் எதிர்ப்புத் தெரிவித்த்தால் விளக்கம் அளித்த உதயநிதி, தன்னுடைய கருத்து தவறாக  புரிந்து கொள்ளப்பட்டதாகவும், கலைஞரின் பேரன் நான் தவறாக பேசமாட்டேன் என்றும் பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

மதங்களை கடந்து திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு – நீதிமன்றத்திடம் மீண்டும் குட்டு வாங்கிய உ.பி., அரசு

இந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா விடம் உதயநிதிக்கு சொல்ல வருவதென்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ எதிர் அணியில் இருந்தாலும் அவர் என்னுடைய தம்பி. சொல்லப்போனால் அவர் என்னுடைய மகன். இப்போது எனக்கு 54 வயதாகிறது. என் மகன் வயது கூட இருக்கலாம், என் தம்பி வயது கூட  இருக்கலாம். என் குடும்பத்தில் ஒருவராக நினைத்து நான் அந்தத் தம்பிக்கு சொல்வது, அந்த மகனுக்கு நான் சொல்வது, பெண்களைப் பொறுத்தவரையில் பொதுவாக அரசியல் ரீதியாக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசி விடலாம் என்கிற எண்ணத்தை அவர் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்