Aran Sei

ஆக்சிஜன் சிலிண்டரோடு ஐ.சி.யூ வார்டு தேடி அலைந்த பெண்- ஐ.சி.யூ வார்டு இல்லாததால் ஐந்து மணிநேரம் தவிப்பு

ர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியில், ஐ.சி.யூ வார்டில் இடம் இல்லாதால் நோயாளி ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு ஆட்டோவில் ஐ.சி.யூ வார்டு தேடி அழைந்துள்ளார்.

‘ஆக்சிஜன் இப்போது டெல்லியின் எமர்ஜென்சி’ – ஆக்சிஜன் வழங்கும்படி டெல்லி முதல்வர் பிரதமருக்கு கடிதம்

பசவா நகர், பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவர் மூச்சுத்திணறல், இருமல் பிரச்சனையின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஐ.சி.யூ வார்டில் இடம் இல்லாததால் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஆக்சிஜன் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் ஐ.சி.யூ வார்டு தேடி அலைந்துள்ளார்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பைக் கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

தன்வந்தரி மருத்துவமனை, வாட்சல்யா மருத்துவமனை, கிரிஸ்டல் மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ.சி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கெல்லாம்  ஆக்சிஜன் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு ஐ.சி.யூ வார்டை தேடியுள்ளார்.

இறுதியில் அவரது உடல் நிலையைக் கருதி ஐ.சி.யூ வார்டில் இடம் இல்லாத நிலையிலும் குல்பர்கா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனை அவரை ஒரு வழியாக அனுமதித்துள்ளது.

source;THE HINDU

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்