Aran Sei

மத்திய பிரதேசத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஆறு நாட்களில் நான்கு குற்றங்கள்

த்திய பிரதேச மாநில உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமியை ஒன்பது ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு, மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ‘சம்மன்’ என்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை நடத்தி வரும் நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில், மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான நடக்கும் நான்காவது சம்பவம் இது என்பதால், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

இதுகுறித்து, மத்திய பிரதேச காவல்துறையினர் கூறும்போது, “ஜனவரி 4 ஆம் தேதி, 13 வயது சிறுமியை ஒரு இளைஞன் கடத்திச் சென்று, அவனது ஆறு நண்பர்களுடன் இரண்டு நாட்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். ஜனவரி 5 ஆம் தேதி அச்சிறுமியை விடுவிப்பதற்கு முன், இதை வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளான். அதனால் சிறுமி புகார் அளிக்கவில்லை. அதை தொடர்ந்து, ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 11 ஆம் தேதி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த ஏழு பேரில் ஒருவனால், மீண்டும் கடத்தப்பட்டு, காடுகளிலும், சாலையோர உணவகத்திலும் வைத்து அவனோடு சேர்த்து மூன்று பேர் பாலியல் வம்கொடுமை செய்துள்ளனர்.” என்று கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

பெண்கள் பற்றிய கருத்து – சக்திமானுக்கு வலுக்கும் கண்டனங்கள்

மேலும், “அங்கிருந்து விடுவிக்கப்பட்ட சிறுமி மீண்டும் கடத்தப்பட்டு இரண்டு லாரி ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி வெள்ளிக்கிழமை அதிகாலை தப்பி ஓடி தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி, அம்மாநில சித்தி மாவட்டத்தில் தனது குடிசைக்குள் இருந்த 48 வயது பெண் ஒருவரை நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறும் காவல்துறையினர், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி,  அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியைச் செலுத்தியுள்ளான் என்றும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

இந்தக் குற்றம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 11 ஆம் தேதி, 13 வயது சிறுமியை அண்டை வீட்டு இளைஞன் ஒருவன் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜனவரி 12 ஆம் தேதி, உஜ்ஜைன் மாவட்டத்தில் ஒரு இளம் பெண்ணை, அவரது கணவரும் மாமியாரும் இணைந்து, கூர்மையான கத்தியால் பெண்ணின் மூக்கு, மார்பகம் மற்றும் அவரது உடலின் சில பகுதிகளை வெட்டியுள்ளனர். இந்தூரில் உள்ள மருத்துவமனையில் பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்டிடிவி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்