இஸ்லாமியர்களின் மதவழக்கப்படி கணவனை விவாகரத்துச் செய்யப் பெண்களுக்கு ’குலா’ எனும் விதிமுறை உள்ளது. அவ்விதிமுறை தற்போதும் செல்லும் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் உள்ள இஸ்லாமிய பெண் தன் கணவரை ‘குலா’ முறையில் விவாகரத்து செய்துள்ளார். இதை ஏற்காத அவரது கணவர், பெண்களுக்குத் தலாக்கை போல் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை இல்லை என மறுத்துள்ளார். இதற்காக கல்பேட்டாவின் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பெண் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதேபோல் கேரளாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவேறு சிலருக்கும் வந்த பிரச்சினையால் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஏப்ரல் 9-ல் குலா முறை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
“நீங்கள் எங்கள் இதயத்தில் நிறைந்துள்ளீர் விவேக்” – அரசியல் ஆளுமைகள், திரைக்கலைஞர்கள் இரங்கல்
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகமது முஸ்தாக், சி.எஸ்.தியாஸ் கூறிய தீர்ப்பில், ஷரியாத் சட்டம் மற்றும் முஸ்லீம் திருமணங்களைக் கலைத்தல் சட்டத்தில், இஸ்லாமிய பெண்கள் தங்களது திருமணத்தை ரத்து செய்ய உரிமையுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இது போன்ற ஒரு வழக்கில் கடந்த 1972-ம் ஆண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி தீர்ப்பு வெளியாகி இருந்தது. அதில் நீதிமன்றத்திற்கு வெளியே முஸ்லிம்களில் கணவருக்கு உள்ளது போல் மனைவிக்கு விவாகரத்து செய்ய உரிமை இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது வெளியான உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பால் 1972-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்றாகி விட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.