Aran Sei

அமெரிக்காவில் 70 ஆண்டுகளில் முதல்முறையாக மரண தண்டனை – விஷ ஊசி செலுத்த திட்டம்

மெரிக்காவில், கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக, லிசா மாண்ட்கோமேரி என்ற பெண்ணுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்படவுள்ளது.

2007 ஆம் ஆண்டு, மிசௌரி மாகாணத்தில், பாபி ஜோ என்ற கர்ப்பிணிப் பெண்னைக் கடத்தி கொலை செய்த வழக்கில், லிசாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

மரணதண்டனையை எதிர்த்து லிசா, கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதியாக, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், லிசாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது. தற்போது அந்தத் தடையை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

ஈராக்கில் குழந்தைகளை சுட்டுக்கொன்ற ராணுவத்தினர் – விடுதலை செய்ய உத்தரவிட்ட டிரம்ப்

லிசா, நீண்டநாளாக மனநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்காக சிறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ள அவரின் வழக்கறிஞர் ஹென்றி, லிசாவுக்கு மரணதண்னை வழங்கப்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அவர் வெளியிட்ட அறிக்கையில் லிசா, குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் கடைசியாக 1953ஆம் ஆண்டு, போன்னி ஹெட்டி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, மரண தண்டனை தகவல் மையம் தெரிவித்துள்ளது. மிசௌரி மாகாணத்தில், விஷவாயு செலுத்தி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?

இண்டியானா மாகாணத்தில், டெர்ரி ஹவுட் என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிசாவுக்கு, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

லிசாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நேரில் பார்ப்பதற்காக, அவரால் கொலை செய்யப்பட்ட பாபியின் உறவினர்கள், இண்டியானாவுக்கு வந்துள்ளதாக, அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய அரசால் (Federal government) மரண தண்டனை நிறைவேற்றப்படுவது, கடந்த 17 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிரம்ப் அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம், அதை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்